நாளை அனைவரும் கருப்பு ஆடை அணிய பெர்சே கோரிக்கை

blackதேர்தல்  சீரமைப்புக்காக  போராடும்  பெர்சே,  அண்மையில்  மே  தினப் பேரணியில்  கலந்து  கொண்டவர்களுக்கு  எதிராக  மேற்கொள்ளப்பட்ட  நடவடிக்கைக்குக்  கண்டனம்  தெரிவிக்கும்  வகையில்  மலேசியர்கள்  நாளை  கருப்பு  ஆடை  தரிக்க வேண்டும்  எனக்  கேட்டுக்கொண்டிருக்கிறது.

‘ஒப்ஸ் ஹித்தாம் 505’ என  அழைக்கப்படும்  இக்  கண்டன  இயக்கம்  13வது பொதுத்  தேர்தலில்  பிஎன்  பெற்ற  குறுகிய  வெற்றியின் இரண்டாம்  ஆண்டு  நிறைவின்போது நடைபெறுவது  குறிப்பிடத்தக்கது.

“2015 மே 5-இல், எல்லா  மலேசியரும்  கருப்பு  ஆடை  அணிய  வேண்டும் அல்லது  தங்கள்  வாகனங்களில்,  கட்டடங்களில்  அல்லது  உடைமைகளில்  கருப்பு  ரிப்பன்கள் அல்லது  துணிகளைக் கட்ட  வேண்டும்  எனக்  கேட்டுக்கொள்கிறோம்.

“இது  கோலாலும்பூரிலும்  கோத்தா  கினாபாலுவிலும்  மே  தினப் பேரணியில்  கலந்துகொண்ட  தலைவர்களையும்  பங்கேற்பாளர்களையும் கைது  செய்தும் காவலில்  வைத்தும் தொல்லை  படுத்திய  ‘நஜிப்பின்  சிறுபான்மை அரசை’ நிராகரிப்பதற்கான  அறிகுறியாகும்”, என  பெர்சே  ஒர்  அறிக்கையில்  கூறிற்று.