பிஎஸ்டி புதிதாக ஆள் சேர்ப்பதை நிறுத்தியுள்ளது, பண முடையா?

psdபுதிதாக  ஆள்  சேர்ப்பதை  நிறுத்துமாறு 15 அரசுத் துறைகளுக்கு   உத்தரவிடப்  பட்டிருப்பதாக  சின் சியு  டெய்லி  செய்தி  ஒன்று  தெரிவிக்கிறது.

இதில்  கல்வி  அமைச்சு, போலீஸ், ஆயுதப் படைகள்  ஆகியவையும்  உள்ளிட்டிருப்பதாக அச்செய்தி  கூறிற்று.

ஏப்ரல் 22  தேதியிடப்பட்ட  அரசாங்கச்  சுற்றறிக்கையின்படி  அரசுத் துறைகளுக்குப்  புதிதாக  ஆள்  சேர்ப்பது  நிறுத்தி  வைக்கப்பட்டுள்ளதாக  தெரிகிறது.

ஆனால்,  “முக்கியமான” பதவிகளுக்கு  ஆள்சேர்ப்பது  தொடரும் என  பொதுச் சேவை ஆணைய(பிஎஸ்சி)த்  தலைவர்   முகம்மட் ஆடம்  அந்நாளிதழிடம்  கூறினார்.

ஏப்ரல் 22-க்கு  முன் நேர்காணலுக்கும்  சேவைக்கு- முந்திய  பயிற்சிக்கும்  அழைக்கப்பட்டவர்கள்  இதனால்  பாதிக்கப்பட  மாட்டார்கள்  என்பதையும்  அவர்  உறுதிப்படுத்தினார்.

மேல்விவரம்  தெரிவிக்க முகம்மட்  மறுத்து  விட்டார்.

“(இவ்விசயத்தில்) பொதுச்  சேவைத்  துறை(பிஎஸ்டி) தான்  முடிவு  செய்கிறது. அதை நடைமுறைப்படுத்துவதே பிஎஸ்சி-இன்  வேலை.

“அதனால், மேல்விவரங்கள்  தேவையென்றால் பிஎஸ்டி-யைத்தான் கேட்க  வேண்டும்”, என்றார்.