இன்று ரொம்பின் நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
அத்தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் ஜமாலுடின் ஜர்ஜிஸ் ஏப்ரல் 4-இல் ஹெலிகாப்டர் விபத்தில் காலமானதை அடுத்து இவ்விடைத் தேர்தல் நடைபெறுகிறது.
அத்தொகுதியில் 52,744 வாக்காளர்கள் உள்ளனர். வாக்களிப்பு காலை மணி 8-க்குத் தொடங்கியது. மாலை மணி 5-க்கு முடிவுறும்.
ரொம்பின் பிஎன்னின் கோட்டையாகும். கடந்த ஐந்து பொதுத் தேர்தல்களில் பிஎன் 6,000 வாக்குகளுக்கும் அதிகமான பெரும்பான்மையில் பாஸ் கட்சியைத் தோற்கடித்துள்ளது.
13வது பொதுத் தேர்தலில் ஜமாலுடின் 15.114 வாக்குகள் பெரும்பான்மையில் பாஸ் மகளிர் பிரிவுத் தலைவர் நூரிடா முகம்மட் சாலே-யை வென்றார்.
இப்போதைய இடைத் தேர்தல் பிஎன் வேட்பாளர், முன்னாள் துணை மந்திரி புசார் ஹசான் அரிப்பினுக்கும் பாகாங் பாஸ் இளைஞர் தலைவர் நஸ்ரி அஹ்மட்டுக்கு நேரடிப் போட்டியாகும்.
ஹசான் ஒரு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். அத்துடன் ரொம்பின் பிஎன்னின் கோட்டை என்பதால் அவரது கை மேலோங்கி இருக்கும் என்று கருதப்படுகிறது.
அதற்காக நஸ்ரியை ஒதுக்கி விட முடியாது. அவர் இரண்டாம்-தலைமுறை பெல்டா குடியேற்றக்காரர். அத்தொகுதியில் 14 பெல்டா குடியிருப்புகள் உள்ளன.
பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி)யைப் பொதுமக்கள் எப்படி ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அளவிடுவதற்கு இத்தேர்தல் பயன்படும் என்றும் கருதப்படுகிறது.
இருந்தாலும் BN தோல்வி பெற வேண்டும் ,,மலாய்க்காரன் எப்ப மாருகிரானோ அன்றைக்குத்தான் நாடும் மாறும் ,பார்ப்போம் ,,