ஒரு தேர்தலில் வாக்காளர்களுக்குப் போக்குவரத்துப் படி வழங்குவது எந்தத் தேர்தல் சட்டத்தையும் மீறுவதாகாது என்கிறார் தேர்தல் ஆணைய(இசி) தலைவர் அப்துல் அசிஸ் யூசுப்.
“குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்க வாக்காளருக்குப் பணம் கொடுப்பதும் அவ்வாக்காளர் அக்கட்சிக்கே வாக்களிப்பதும்தான் குற்றமாகும்.
“வாக்காளர்கள் திரும்பி வந்து வாக்களிக்க உதவித் தொகை வழங்குவது பற்றி மலேசிய ஊழல்- தடுப்பு ஆணைய(எம்ஏசிசி) த்திடமும் கேட்டேன். அது குற்றமல்ல என்றுதான் எம்ஏசிசி-யும் கூறியது”, என்றாரவர்.
பணம் கொடுப்பவர் அதைப் பெற்றுக்கொள்பவரிடம் குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டால் மட்டுமே குற்றமாகும்.
ரொம்பின் இடைத் தேர்தல் நடவடிக்கை அறையில் வாக்காளர்களுக்குப் “போக்குவரத்து உதவித்தொகை” வழங்கப்படுவது பற்றிக் கேட்டதற்கு அசிஸ் இவ்வாறு கூறினார்.
ஆனால், தாம் இப்படிப்பட்ட பழக்கத்தை ஊக்குவிக்கவில்லை என்பதையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.