வாக்காளர் எண்ணிக்கை குறையலாம் என பக்கத்தான் கவலை

voterமிகவும்  ஆவலுடன்  எதிர்பார்க்கப்படும்  பெர்மாத்தாங்  பாவ்  இடைத்  தேர்தலுக்கு  இன்னும்  இரண்டு நாள்களே  எஞ்சியுள்ள  வேளையில் பக்கத்தான் ரக்யாட்டுக்கு பயம்  வந்து  விட்டது.

வாக்காளிப்பு  நாளில்  வாக்களிக்க  வருவோர்  எண்ணிக்கை  குறைந்தால்  அது  தன்  வேட்பாளர்  டாக்டர்  வான்  அசிசா  வான்  இஸ்மாயிலின்  வெற்றி  வாய்ப்பைப்  பாதிக்கலாம்  என்று  அது  நினைக்கிறது.

அந்நாடாளுமன்றத்  தொகுதியில்  ஆயிரம்  பேரிடம்  பிகேஆர்  நடத்திய  ஆய்வு  ஒன்றிலிருந்து  68  விழுக்காட்டினர்தான்  வாக்களிக்க  வருவார்கள்  என்பது  தெரிய  வந்துள்ளதாகக்  கட்சியின்  வியூக  இயக்குனர்  சிம்  ட்ஸே ட்ஸின்  கூறினார்.

“இது கவலை  அளிக்கிறது”, என குபாங்  செமாங்கில்   நடைபெற்ற  பக்கத்தான்  ரக்யாட்டின்  அன்றாடச்  செய்தியாளர்  கூட்டத்தில்  அவர்  குறிப்பிட்டார்.

கடந்த  ஆண்டு  தெலோக்  இந்தான்  இடைத்  தேர்தலில்  டிஏபி-இன்  டயானா  சோப்யா  தோற்றுப்போனதும்  அவரது  நினைவுக்கு  வந்தது.

பிகேஆரின்  கணக்கின்படி  பெர்மாத்தாங்  பாவின்  71,000 வாக்காளர்களில்  சுமார்  7,000 பேர்  வெளியூர்களில்  வேலை  செய்கிறார்கள்.  வாக்களிப்பு  நாளான வியாழக்கிழமை  ஒரு  வேலை  நாள்  என்பதால்  அவர்கள்  வாக்களிக்க  வருவார்கள்  என  எதிர்பார்க்க  முடியாது.

வாக்களிப்பு  நாளாக  வேலை  நாளைத்  தேர்ந்தெடுத்தது  ஏன்  என்பதற்குத்  தேர்தல்  ஆணையம்தான்  விளக்கமளிக்க  வேண்டும்  என  சிம்  கூறினார். அது  ஒருவரின்  வாக்களிக்கும்  உரிமையைப் பாதிப்பதாக  அவர்  குறிப்பிட்டார்.