கடந்த வெள்ளிக்கிழமை பொருள், சேவை வரி எதிர்ப்புப் பேரணியின்போது ஆறு மைனர்கள்(21 வயது ஆகாதவர்கள்) ஓர் இரவு முழுக்க தடுத்து வைக்கப்பட்டது பற்றி மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் ரொஹானி அப்துல் கரிமிடம் வினவியதற்கு அவர் மெளனம் சாதித்தார்.
பின்னர், “அதைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமே விட்டு விடுகிறோம்”, என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அவருடன் இருந்த சமூக நலத்துறையின் சிறுவர் பிரிவு இயக்குனர் அர்பான் சுலைமானும் அமைச்சரைப் போலவே பதிலளித்தார்.
“அவ்விவகாரத்தைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அதாவது போலீசிடமே விட்டு விடுகிறோம்”, என்றாரவர்.
மே தின ஜிஎஸ்டி- எதிர்ப்புப் பேரணி முடிவடைந்த சிறிது நேரத்தில் 17-வயதினர் என்று நம்பப்படும் அந்த ஆறு மைனர்களும் மேலும் 23-பேருடன் கேஎல்சிசி-க்கு வெளியில் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் டாங் வாங்கி போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்டபோது கைவிலங்கிடப்பட்டு சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தனர் என வழக்குரைஞர் மிட்சல் யேசுதாஸ் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
“அவர்கள் மைனர்கள் என்று தெரிவிக்கப்பட்டும்கூட போலீசார் அவர்களின் விலங்குகளை அகற்ற விரும்பவில்லை”, என்றாரவர்.
கிட்டதட்ட ஏழு மணி நேரத்துக்குப் பின்னர், பின்னிரவு 1 மணிக்கு அவர்களைச் சந்திக்க வழக்குரைஞர்களை அனுமதித்தபோதுதான் விலங்குகளை அகற்றினார்கள் என்றாரவர்.
மைனர்களும் இந்நாட்டுக்கு பெரிய மருட்டலாக உள்ளனர், ஆகவே கைது செயத்தான் வேண்டும். நல்ல கதை அப்பா…
அமைச்சரிடம் கேளுங்கள். உண்மையைச் சொன்னால் தலை கோவிச்சுக்கும். பொய் சொன்னா மக்கள் கோவிச்சிக்குவாங்க. பாவம் மந்திரி இஞ்சி தின்ன குரங்கு மாதிரி ஆயிப் போச்சி.