ரோம்பின் தொகுதிக்கான நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பாரிசான் வேட்பாளர் வெற்றி பெற்றார். ஆனால், அவருடைய பெரும்பான்மை வாக்குகள் வெகுவாக குறைந்துள்ளன. அதற்கான காரணம் வாக்காளர்கள் ஜிஎஸ்டி வரி மீதான கோபமாக இருக்கக்கூடும்.
இரவு மணி 10.15 க்குப் பின்னர் தேர்தல் ஆணையம் பாரிசான் வேட்பாளர் ஹசான் அரிப்பின் வெற்றி பெற்றார் என்று அறிவித்தது. அவர் 8,895 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். அது ஈராண்டுகளுக்கு முன்னர் 2013 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பாரிசானுக்கு கிடைத்த பெரும்பான்மையில் சுமார் 41 விழுக்காடு குறைவாகும்.
பகாங் மாநிலத்தின் முன்னாள் துணை மந்திரி புசாரான ஹசான் 23, 796 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஸ் வேட்பாளர் நாஸ்ரி அஹமட் 14, 901 வாக்குகளைப் பெற்றார்.