அசிசா: ‘ஐயா, நான் ஒரு பாட்டிதான், அதனால் என்ன?’

grandபெர்மாத்தாங்  பாவில்  போட்டியிடும்  பிகேஆர்  வேட்பாளர் டாக்டர் வான்  அசிசா  வான்  இஸ்மாயில்  தம்மைப்  “பாட்டி”  என்றும் 44-வயது  பிஎன்  வேட்பாளர்  சுஹாய்மி  சபுடின்  இளம் வயதினர்  என்றும் கூறுவோரைச்  சாடினார்.

வான்  அசிசா, பரப்புரைக்குச்  செல்லும்  நேரங்களில்  பெரும்பாலும் கையில்  விசிறியுடன்  செல்வதால்  அவரை “விசிறி  பாட்டி”  என்று  அழைக்கிறார்கள்.

“பாட்டி  என்று  கூப்பிட்டுக்  கொள்ளுங்கள், அதனால்  என்ன? பாட்டி  என்பதில்  பெருமைப்படுகிறேன்”, என்றவர்  நேற்று  செப்ராங்  பிறையில்  ஒரு  விருந்தில்  கூறினார்.

மலேசியர்களுக்கு  அண்மையில்  இரண்டு  மிகப்  பெரிய  துயரங்கள்  நிகழ்ந்திருப்பதாக வான்  அசிசா  குறிப்பிட்டார். ஒன்று  பொருள், சேவை  வரி, இன்னொன்று  பேச்சுச்  சுதந்திரத்தின் இழப்பு.

அண்மையில் கோலாலும்பூரில் ஜிஎஸ்டி-எதிர்ப்புப்  பேரணி  தொடர்பில்  வழக்குரைஞர்  மன்ற  முன்னாள்  தலைவர்  அம்பிகா  ஸ்ரீநிவாசன்  உள்ளிட்ட 30-க்கும்  அதிகமான  அரசியல்வாதிகளும் சமூக  ஆர்வலர்களும்  கைது  செய்யப்பட்டதை  அவர்  சுட்டிக்காட்டினார்.

மலேசியா  ஒரு  “சுதந்திர”  நாடு என  வான்  அசிசா  குறிப்பிட்டார்.

“அப்படியிருக்க, எதற்காக  வாயை  மூடிகொண்டு  பேசாதிருக்க  வேண்டும்? இந்த  நடவடிக்கையை  ஏற்கவில்லை  என்ற  தெளிவான  செய்தியைப்  பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்குக்கு  உணர்த்த  தயவு  செய்து வாக்களிக்க  வாருங்கள்”, என பெர்மாத்தாங்  பாவ்  வாக்காளர்களை  அவர்  கேட்டுக்கொண்டார்.