உயர் நிர்வாகப் பணிகளில் பெண்கள்: மலேசியாவுக்கு ஆசியாவில் உயர்ந்த இடம்

ladiesஉயர்  நிர்வாகப்  பணிகளுக்குப்  பெண்களைத்  தேர்ந்தெடுப்பதில் ஆசியாவின்  முன்னணி  நாடுகளில் ஒன்றாக திகழ்வதற்காகப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  மலேசியாவைப்  பாராட்டினார்.

மலேசியாவில்  34 விழுக்காட்டு  உயர்  நிர்வாகப்  பதவிகளுக்குப் பெண்கள்  நியமிக்கப்பட்டிருப்பதை ஆய்வு  ஒன்று  காண்பிப்பதாக நஜிப்  குறிப்பிட்டார். இவ்விசயத்தில் ஆசியாவின்  சராசரி  29  விழுக்காடுதான். முடிவெடுக்கும் பதவிகளில் பெண்கள்  இருப்பதை  ஊக்குவிக்கும் அனைத்துலக  நிறுவனமான  30% மன்றத்தின்  மலேசிய  கிளையைத்  தொடக்கி வைத்து  பிரதமர்  பேசினார்.

“சீனாவுக்கு  அடுத்த  இடத்தில்  நாம்  இருக்கிறோம். முதல் முறையாக  ஹாங்காங்கையும்  சிங்கப்பூரையும் தாண்டி  இந்த  இடத்துக்கு  வந்திருக்கிறோம்”,  என்றாரவர்.