இன்று மாலை மலேசியாகினியில் (@kini) நடைபெறவுள்ள செம்பருத்தியின் விவாத மேடை 8.30 முதல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். live.malaysiakini.com (இங்கே சொடுக்கவும்) என்ற அகப்பக்கத்தில் நேரடியாக பார்க்கலாம். பதிவிறக்கமும் செய்யலாம்.
என்ன தலைப்பு இது? என்ற வினாக்களை பலர் தொடுத்துள்ளனர். யார் அதிகமாக இந்தியர்களை மொட்டை அடித்தார்கள்? என்ற தலைப்புதான் சரியானது என்று நொந்தவர்களும் உண்டு.
மகாதிர் காலத்தில்தான் இந்தியர்களின் ஒரே கட்சியான மஇகா மிகவும் வலிமையாக இருந்தது. அதிகமான இந்தியர்கள் ஆளும் கட்சியின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் இருந்தனர். அப்போது அசைக்க முடியாதா ஆசாமியாக மஇகா-வின் சாதனைத்தலைவர் சாமிவேலு இருந்தார். அதிகமான இந்தியர்கள் தேசிய முன்னணியை ஆதரித்ததும் அப்போதுதான்.
ஆனால், நஜிப் காலத்தில் மஇகா மட்டுமல்லாமல் அனைத்து தேசிய முன்னணியின் கட்சிகளும் வீரியம் இழந்தன. பொதுத்தேர்தலில் (2008) மஇகாவின் மூன்று நபர்கள் மட்டுமே நாடாளுமன்ற தேர்தலில் மண்னைக்கவ்வாமல் எழ முடிந்தது. பாதிப்படைந்த இந்தியர்களில் பாதிக்குப்பாதி தேசிய முன்னணியை புறக்கணித்தனர்.
அதன் பிறகுதான், அரசாங்கம் அதிகமான பணத்தை இந்தியர்களுக்காக ஒதுக்க ஆரம்பித்தது.
ஆனால், மேம்பாடு என்பது என்ன? அதை பண ஒதுக்கீட்டால் மட்டும் பெற முடியுமா? பசியாக உள்ள ஒருவருக்கு உணவு கொடுத்து அவரை மேம்படுத்த முடியுமா?
சிலர் இந்தியர்கள் மேம்பாடு அடையவேயில்லை என்றும் புலம்புகின்றனர். நாட்டின் மேம்பாட்டுக்கு உகந்த வகையில் இந்தியர்கள் மேம்பாடு அடையவில்லை என்பதுதான் சரி. அதேவேளையில் முழுமையாக மேம்பாடி அடைந்த சமூகம் உருவாக அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்வியும் எழுகிறது.
விவாத மேடைக்கு வரும் தேசிய முன்னணியின் தேவமணியும், மக்கள் கூட்டணியின் சார்ல்ஸ் சந்தியாகோ, சேவியர் ஜெயகுமார், ஜெயகுமார் தேவராஜ் மற்றும் ஹிண்ராப் கணேசன் ஆகியோர் எவ்வகையான விவாதங்களை முன்வைப்பர்.
இதன் எல்லையில் அவர்களின் விவாதங்கள் நமக்கு கொடுக்கும் படிப்பினைதான் என்ன?
நாம் மேம்பாடு அடைய, இவை உதவ வேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பு.
1. விவாத மேடை பேச்சாளர்கள் வெறும் அம்புகள்.இவர்களின் கட்சிகளையும் , கட்சித் தலைவர்களையும் தற்காத்து தங்களின் அரசியல் பிழைப்புக்கு குந்தகம் விளையாதவாறு பசப்பி விடுவார்கள். 2.அதே சமயம் இவர்கள் முன்வைக்கும் பரிந்துரைகளுக்கு குறைவொன்றும் இருக்காது. மேடையில் அருமையான திட்டங்களை முன்வைக்கும் இவர்கள் அவற்றை எப்படி அமல் படுத்தப் போகிறார்கள் என்று ஒரு வார்த்தைக் கூட உதிர்க்க மாட்டார்கள். இவ்வளவு பேசும் இவர்கள் இதுவரை ஏன் கிழிக்கவில்லை என்று கேட்பதற்கும் யாரும் முன்வரமாட்டார்கள்… 3. புத்திரா ஜெயாவை கைப்பற்றிய பிறகு நாங்கள் எப்படி கிழிக்க போகிறோம் என்று பாருங்கள் என்று சேவியரும் , சார்ல்சும் கொக்கரிக்க , எவ்வளவோ செய்திருக்கிறோம், அரசு நிறைய திட்டங்களில் இந்தியர்களுக்கு வாய்ப்பை திறந்து வைத்திருகிறது ஆனால் நம் சமுதாயம் அவற்றை முழுமையாக பயன் படுத்துவது இல்லை என்று தேவமனியும், இன அடிப்படையில் திட்டங்கள் வகுக்கப்பட கூடாது அதுவே மலேசியாவின் இன்றைய தோல்விக்கு காரணம் என்று ஜெயகுமாரும், யாரும் ஒன்னும் செய்யவில்லை, செய்யவும் முன்வர தயாராக இல்லை என்று கணேசனும் தங்கள் வாதங்களை முன் வைத்து அவரவர் பேச்சை நிறைவு செய்வார்கள் . 5.இதுவரை நான் பட்ட அனுபவத்தின் வெளிப்பாடுகள்தாம் அந்த கருத்துக்கள். விவாத மேடையின் முடிவு வேறுமாதிரியாக , ஆக்கப் பூர்வமாக அமைந்தால் மகிழ்ச்சி அடைவேன் இல்லையேல் அதிர்ந்து போகமாட்டேன் , வாழ்வில் எத்தனை முறைதான் அதிர்ந்து போவது? 5. ஒரு தாழ்மையான வேண்டுகோள் , ரசிகர்களுக்கு , உங்கள் கட்சிக் காரரை ஆதரிக்கும் வேகத்தில் விவேகமற்ற முரட்டுத்தனத்தில் இறங்கி மயிரிழையில் தொங்கிக் கொண்டு இருக்கும் நம் சொற்ப தன்மானத்திற்கும் களங்கம் விளைவித்து விடாதீர்கள்.
ஐயா நப்பாசை அவர்களே. என்னவரப் போகுதுன்னு தங்கள் அனுபவம் சொல்லுது. இனி வரும் காலத்தில் இந்தியர் மேம்பாட்டுக்கான செயல் வடிவம், அதனை செயல்படுத்த வேண்டிய வழிமுறைகள், அராசாங்கத்தின் செயல்கள், இந்தியரின் பங்களிப்பு, செயல்கள் யாரை நோக்கி இலக்கு கொண்டிருக்க வேண்டும் இதில் மேல் தட்ட களவாடிப் பைகளை எப்படி விலக்குவது என்று அரசாங்கமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
கூடிய விரைவில் இந்நாட்டில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு குதிரைக் கொம்பாக மாறவிருக்கின்றது. இதனை இந்தியர்கள் சமாளிக்க என்ன ஆலோசனைகள் தேவை என்றும் இவர்கள் தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும்.
மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் அராசாங்கம், மக்களுக்கான திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்கின்றதா, அல்லது போனால் பங்காளி கட்சிகளின் தலைவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விடுகின்றதா? அந்தந்த கட்சிகளின் தலைவர்களும் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் காதும் காதும் வைத்ததை போன்று காரியத்தை கச்சிதமாக முடீத்து விடுகின்றனவா? மக்களுக்காக செயல் படும் அரசாங்கம் என்றால் மக்களுக்காக வகுக்கும் திட்டங்களை தகவல் சாதனங்களின் வளி, எந்த பாகுபாடும் பார்க்காமல் மக்களுக்கு தெரியப்படுத்த கடமைப்பட்டுள்ளனர் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும், ஆனால் மூவினங்களும் வாழும் நம் மலேசிய நாட்டில் மலாய் நாளிதழ்களில் மட்டுமே போதிய அவகாசத்துடன் அரசாங்க திட்டங்களின் தகவல்கள் பிரசுரிக்கப்படுகின்றன. தமிழ் மொழி தகவல் சாதனங்கள் அரசாங்கத்தால் புறக்கணிக்கப்படுவதை மிக மன வேதனையுடன் கண் கூடாக காண்கிறோம். இப்படி மாற்றான் விட்டு பிள்ளையாக நம்மை உதாசீனப் படுத்தும் எந்த ஒரு அரசாங்கமும் கல ஓட்டத்தில் காணாமல் போவதை நாமும் நம் சந்ததியினரும் பார்க்கத்தானே போகிறோம்.
மாகாதிர் காலத்திலா? நஜிப் காலத்திலா? அட முட்டாள் கள ,,இவனுங்க இரண்டு பேரு காலத்திலும் தமிழனுக்கு எந்த ஒரு மேம்பாடும் கிடைக்க வில்லை பலாப்பழ கோட்டையும் கிடைக்கவில்லை ,இது ஒரு விவாதன்னு பேச போறேன்க்களா ,,பேசிக்கிட்டே இருங்கடா ,பெசவில்லைன்னா தமிழன் சேது போயிடுவான்
ரமலா அழகாய் சொன்னீர் .. மக்களால்..மக்களுக்காக..மக்கள்…ம்ம்ம்ம்ம் இது கனவில் ஒலிக்கும் அசரீரி போல் எனக்கு ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது… “மாற்றான் விட்டு பிள்ளையாக நம்மை உதாசீனப் படுத்தும் எந்த ஒரு அரசாங்கமும் கால ஓட்டத்தில் காணாமல் போவதை நாமும் நம் சந்ததியினரும் பார்க்கத்தானே போகிறோம்” என்ற உங்கள் வார்த்தைகள் உண்மையானவை. என்னுடைய அச்சமும் கவலையும் நீங்கள் சொன்ன நிகழ்வு நடக்கும்போது நம் எதிர்கால சந்ததியினர் எதையெல்லாம் தொலைத்து விட்டு பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்பதுதான்..
தலைவா! [தேவமணி] இந்தியர்களை விட்டுத்தள்ளுங்கள், பிச்சைக்கார சமூகம். நீங்கள் மேம்பாடடைந்தது [சொத்து சேர்த்தது]எவர் காலத்தில் என்று சொல்லுங்கள், விவாத மேடை, விவாதமின்றி முடிந்துவிடும்.
ஐயா மோகன் அவர்களே, ஐ லைக் இட்.
தயவு செய்து அரசியல் அமைப்பைசார்ந்த்தவர்கள் இல்லாமல் இது மாதிரியான கலந்த்துரையாடல்கள் நடத்தினால் ஒளி மறைவின்றி கருத்து பரிமாற்றங்கள் நடைபெரும் ஏற்பாட்டிற்கு நன்றி
தலைப்பை ஒட்டி யாரும் பேசுவதாகவே தெரியவில்லை.
தலைப்பை ஒட்டி யாரும் பேசியதாகவே தெரியவில்லை. சிலருக்கு ஏற்புடையதாக இருக்கலாம். பலருக்கு ஏற்புடையது அல்லாமல் இருக்கலாம். இருந்தாலும் இது ஒரு நல்ல முயற்சி. பாராட்டுக்கள் .
இத்தகைய விவாத மேடைகளில் அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகள் எவ்வாறு நமக்கு பயனளித்தது அல்லது பயனளிக்கத் தவறியது என்று பேசுவதற்கு மேற்கொண்டு கவனம் செலுத்தி இருக்க வேண்டும். அதை விடுத்து விவாத மேடையில் பேசப்பட்ட நடைமுறையில் நிகழும் உள்ளூர் (micro matter) விஷயங்களை வேற்று மேடையில் வைத்துக் கொண்டிருக்க வேண்டும். இத்தகைய விவாத மேடையை மேம்படுத்த இன்னும் அதிக இடம் உள்ளதாக தெரிகின்றது.
நல்ல ஒரு விவாத மேடையை ஏற்படுத்திக் கொடுத்த மலேசியாகினி மற்றும் செம்பருத்தி ஆசிரியர் குழுவிற்கு மனமார்ந்த நன்றி. நம் இந்தியர்கள் நலனுக்காக. விவாதத்தைப் பற்றி மேலும் சிந்திப்போம் கருத்து பரிமாறிக் கொள்வோம்.
அண்ணாச்சி ஒருவர் நம்ம கவி பேரரசு வைரமுத்துவைப் போல் பேசினாரே அவர் யார் என்று தெரிவியுங்கள். பொன் ரங்கன் அவர்கள் எதிர்காலத்தில் விவாத மேடையில் கலந்துக் கொண்டு கலாயிக்கலாமே. இளஞர்கள் சிலர் இவ்வாறான இடங்களில் உணர்ச்சி வசப்படாமல் கேள்வி கேட்கவோ, கருத்துச் சொல்லவோ பழகிக் கொண்டு பார்வையாளராக கலந்துக் கொள்வது நல்லது. இன்னும் தரமான கேள்விகள் கேட்டு விவாதிக்க வாய்ப்புக்கள் இருந்தது. மீண்டும் சந்திப்போம் சிந்திப்போம்.
வரவேற்க கூடிய நிகழ்வு…மலேசியா இந்தியர்களின் ஆரோகியமான ஒற்றுமையை நிலை நாட்டுவதற்கு ஒரு அடித்தளம் …வாழ்த்துக்கள்…..வளரட்டும் உங்கள் முயற்சி!!
1MDB விவாத மேடை போட்டால் நன்றாக இருக்கும். மகாதிரும் நஜிப்பும் விவாதித்தால், இன்னும் நன்றாக இருக்கும்.
அய்யா தேனீ அவர்களே உன்ர்ச்சிவசப்ப்பட்டு கேள்வியை கொட்டியவர்களும். “கொட்டியது”அருவருப்பாக.இருந்தது
எழுதிவைத்து படித்திருக்கலாம் இந்த
விவாதத்தால் எந்த தீர்வும் ஏற்ப்படாது
அதற்க்கான அதிகாரம் இல்லையே
ஒரு அலசல்.அம்புட்டுதான் எதிர்பார்த்தவர்களிடமிருந்து.கொட்டக்காணோம் குடும்பம் உயர்ந்தால் பொருளாதாரத்தில் சமுகம் உயரும் !:
டத்தோ தேவமணி பேசிகொண்டிருக்கும் பொழுதான் நேரடி ஒலிபரப்பைக் காண முடிந்தது. ஒலி அதிர்வலைகள் காரணமாக சரியாக விளங்கவில்லை. 2-ம் கட்டத்திற்குப் பிறகே ஒலி வளம் கேட்கும் வண்ணமாக இருந்தது.
டத்தோ தேவமணி கலந்துக் கொண்ட தனிபட்ட ஒரு சில கலந்துரையாடல்களில் நான் கலந்துக் கொண்டிருக்கின்றேன். அங்கே சொன்னதைத்தான் இங்கேயும் சொன்னார். “சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி தடுப்பான்”. இது உண்மைதான். அவரைப் போன்று அரசாங்கப் பதவிகளில் உட்கார்ந்து கொண்டு நம்ம மக்களுக்கு உதவி செய்வது என்பது. நெருப்பின் மீது உட்கார்ந்துக் கொண்டு பணி செய்வது போலாகவும். அரசாங்கம் அறிவிக்கும் கொள்கைகளைச் செயல்படுத்துவது மேல்நிலை அரசாங்க அதிகாரிகள். இந்த அரசாங்க அதிகாரிகளே இனவாதமாக செயல்பட்டால் எப்படி?. ஒரு அமைச்சின் மூத்த அதிகாரிகளே இவர் போன்ற துணை அமைச்சர்களின் (முந்நாள் பதவி) வேண்டுகோளுக்கு செவி சாய்க்கவில்லை என்றால் இவர்களால்தான் என்ன செய்ய முடியும். இப்படி நடந்துக் கொண்டது பொதுச்சேவை துறையின் முந்நாள் தலைமை இயக்குனரே என்றால் என்ன செய்வது?. இது மட்டுமல்ல மற்ற அமைச்சக தலைமை செயலாலர்களிடையே போராடி நம் மக்களுக்கு வேண்டிய பல தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. ஒவ்வொன்றுக்கும் தனிநபர் சென்று கவனித்துக் கொண்டிருக்க முடியாது. அரசாங்கத்தில் பதவி வகிக்கும் நம் இனத்தவர்கள் ஒட்டு மொத்தமாக ஒருங்கிணைந்து செய்ய வேண்டிய காரியத்தை எந்த ஒரு தனி நபர் மீதும் திணிப்பது தவறு. மேல்மட்ட தலைவர்களுக்கே இந்த நிலை என்றால் அடிமட்ட இந்தியர்களின் நிலையை என்னவென்பது.
அரசாங்கத்தின் கொள்கை நமக்கு சாதகமாக இருந்தாலும் அதனை செயல்படுத்துவதில் ‘little Napoleon’ – களால் வரும் சிக்கல், அதில் இருக்கும் ஓட்டைகள் நம்மை முழுமையாகப் பயன் பெறா வண்ணம் வைத்திருகின்றது என்பதுதான் உண்மை. இதைத்தான் திரு. சார்லஸ் சாந்தியாகோ அவர்கள் எடுத்துச் சொன்னார். ‘The trickling effect’. இறுதிகட்டத்தில் பயன் பெற வேண்டிய மக்களுக்கு உண்மையாகச் சேர வேண்டிய பயன், இடைத் தரகர்களால் திசை திருப்பப் பட்டு தனி நபர்களாலோ அல்லது அரசியல் கட்சிகளின் முகவர்களாக செயல் படுவோர் மூலமாகவோ சாதூரியமாக திருடப் படுகின்றது. இந்த இடத்தில் ம.இ.க. தலைவர்கள் குற்றவாளிகளே. உதாரனத்திற்க்கு ஒன்றைச் சொல்வோம்.
கடந்த 2012 – ல் அரசாங்க பட்ஜெட்டில் அறிவித்த RM100/= மில்லியன் தமிழ் பள்ளிக்கான உதவித் தொகை ம.இ.க. மூலம் பள்ளிக் கட்டட மேம்பாட்டிற்கு குத்தகையாலர்களை நியமித்து செயல்படுத்தச் சொன்னால் இவர்கள் செய்தது என்ன?. சூரியா கூட்டுறவு கழகத்தை செயல்படுத்த செய்ய முன்மொழிந்து அது கவுத்துக் கொண்டது. இதற்கு காரணம் நம் ம.இ.க. தலைவர்களிடையே இருந்த சுயநலமே காரணம். பின்னர் இந்த உதவித் தொகை கல்வி அமைச்சகத்தின் கீழ் கொண்டு தமிழ் பள்ளிக் கூடங்களுக்கு கொடுத்த பொழுதோ எவ்வளவு பணம் ஒதுக்கப் பட்டதோ அதில் பாதிப் பணத்திற்கு உரிய செயல் மட்டுமே கீழ் நிலையில் பயன் பெற்றது. இது நமது JKR கீழ் வரும் அனைத்துக் குத்தகைகளுக்கும் தகும். இதுதான் இந்தியர்களுக்கு அரசாங்க மானியமாக கிடைக்கும் நிதியின் நிலை. அப்புறம் இந்தியர்கள் எப்படி மேம்பாடு அடைவது? மேலும் சிந்திப்போம்.
நாம் சற்று பின்நோக்கி பார்த்தால் பல விசயங்கள் புலப்படும். நமது பின்னடைவிற்கு பல காரணங்கள் உள்ளன . ஏன், நாம் கூட ஒரு காரணம். சுதந்திர காலக் கட்டத்தில் உள்ள தலைவர்கள் அம்னோ தலைவர்களை முழுமையாக நம்பியது முட்டாள் தனம். துங்கு மற்ற இனங்களுக்கு பாகுபாடான அரசியலமைப்பை பிரிடிஷரை கையில் வைத்துக் கொண்டு சாதித்து விட்டார்.
ரஜாக் காலத்தில் புதிய பொருளாதார கொள்கை அரங்கேற்றப் பட்டது, நம் தலைவர்களும் சீன தலைவர்களும் சேர்ந்து நமக்கென்ன என இறந்து விட்டனர். இதற்க்கு பெரிய ஆதாரத்தை ரேய்மன் நவரத்தினம் பகிரங்கமாக குற்றம் சாட்டினார், பொய்யாய் இருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்கலாமே?
அதனை புரிந்து தட்டிக் கேட்டு சரி செய்யும் அளவிற்கு எந்தத் தலைவரும் இல்லை. இது இப்படி இருக்க மகாதீர் சாமி காலம். இதுவே நம் இனம் மேலும் பாதாளததிற்கு தள்ளப் பட்ட காலம். மகாதீர் பக்க அரசியல் வாதி, அவன் ஆரம்பித்த ஊழல் இப்பொழுது தலை விரித்தாடுது. சாமி ஏதாவது கேட்டிருப்பான், ஆனால் மகாதீருடைய பலம் தலைவர்களை மட்டும் கைக்குள் வைத்திருப்பது. சாமியின் பலவீனம் தமக்கும் தமக்கு வேண்டியவர்களுக்கும் சேர்த்துக் கொண்டு தன இன மக்களை குண்டர் கும்பல் கொண்டு அடக்கினான். தரமான தலைவர்களை ஒடுக்கினான்.
நாமும் நமூடைய ஒட்டு உரிமையை முழுமையாக பயன் படுத்திக் கொள்ள வில்லை. எனக்கு தெரிந்து பலர் இன்னும் ஒட்டுக்கே பதியவில்லை. நீங்கள் ஓட்டுக்கு பதியவில்லை என்றால்,பிணத்துக்கு சமம். தெரிந்து கொளுங்கள். தகுதி படைத்த வாக்காளர்கள் ஓட்டுக்கு பதியவில்லை எனில் அவர்கள் எந்த உரிமையும் யாரிடமும் கேட்க அருகதை இல்லை. பிணத்துக்கு எங்கையா அருகதை இருக்கும்.2008 க்கு பிறகு ஓரளவுக்கு நம் மக்கள் இதனை உணர்ந்தனர்.
இதனை அறிந்த பிறகே படாவியும் நாஜிப்பும் கொஞ்ச சலுகைகள் கொடுத்தனர். நாஜிப்பு மறைமுகமாக இன்னொரு ஆபத்தான செயலை செய்து கொண்டிருக்கிறான். ஊரு ரெண்டு பட்டால் குத்தாடிக்கு கொண்டாட்டமாம். அது போல நாஜிப்பு இந்தியர்களை இன வாரியாக பிரித்து, தெலுங்கர்கள் மலையாளிகள் என எல்லா சங்களுக்கும் சென்று ரொட்டித் துண்டுகளை போடுகிறான். நாம் அவரவர் தை மொழிக்கு எதிரியல்ல, ஆனால் இது நாளடைவில் எதிர்மறையான முடிவுகளை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆகவே இதுவரை இந்திய தலைவன்காலாலோ இந்திய அரசிய கட்சிகலாலோ நம் மக்களுக்கு பெரிதாக எதுவும் கிடைத்தது இல்லை.
ஆகவே இந்த தலைப்பே தவறானதாகும்.
தேனீ அவர்களே நீங்கள் விரும்பியது போல் நானும் கலந்துக்கொண்டேன். எல்லோரும் பழைய தெரிந்த விரிந்த கதைகளைதாம் கதைத்தனர். செம்பருத்தி ஆறுமுகம் அவர்கள் நிகழ்வை தரமாக வழி நடத்தினார் ..வந்திருந்த அரசியல் தலைவர்கள் மதாதீர் ஏமாற்றினார் நஜிப் மகாதீரின் மாணவர் இப்போது ஏமாற்றி வருகிறார் என்ற முடிவை தந்தனர்.
நான் பேச வேண்டாம் என்றுதான் நினைத்தேன். காரணம் நிகழ்வின் தலைப்பு இந்தியர்கள் அறிந்த உண்மை. அது பொருளாதர வேட்கை
வேட்டை என்பதால் வறுமையில் வைத்து ஓர் இனத்தை அழிக்கும் முடிவு எனபதை பதிவு செய்தேன். தீர்வு என்றால் 1. 8 மக்கள் தொகையை கொண்ட இந்தியர்களுக்கு ஒரு ஆண்டுக்கு 5 பில்லியன் என 10 ஆண்டுகள் 50 என்ற Blanket கடனில்லாத வணிக நிதி/வீடுமனை சொத்து சேர்ப்பு நிதி வேண்டும். இதை பிரதமர் மட்டுமே செய்ய முடியும். இனத்தை அழிக்க வறுமை கோடு போதும். 70 % சகிதம் வறுமை கோட்டின் வாய்க்கும் வயுருக்கும் கீழ் வாழும் இந்தியர்களின் நிலை வணிக விவேகத்தில் மட்டுமே வென்று வர முடியும். அதற்கு கல்வி வேண்டும் என்று சேவியர் சொன்னார். டதோ தேவமணி தாம் பிரதமர் துறையில் இருந்தபோது அதை செய்யணும் இதை செய்யணும் என்ற அதே 20 ஆண்டுகளாக பாலர் பள்ளி பயிற்சி தந்தார். முடிவில் ஈர கருவாடை திருப்பி போட்டு முகர்ந்து வந்த வாந்தி கதைதான் எதையும் சந்தைப்படுத்த முடியவில்லை. நமக்கு இன்னும் அறிவாளி தலைவர்கள் கிடைக்க வில்லை. ஒரு சிறிய சமூகம் 8 அரசியல் கட்சிகளில் புரண்டு படுத்து துப்பி தொடைதுக்கொள்ளும் அரசியல் தன பிரிவினைதான் இந்திய தலைவர்கள் எழுதிவைத்துள்ள “ஏமாற்றம்” என்ற தொடர் கதையின்
ஒவ்வாமை உவமை! இந்தியன் சார்ந்த எல்லா அரசியல் கட்சிகளையும் களைத்து விட்டு ஒரு கட்சி அமைப்பில் வந்தால் ஒழிய நாம் ஓடி ஒளிவதும் ஒழிக்கப்படுவதும் சதியின் விதி. இதற்கு
சுதந்திர சட்டம் என்ற பருப்பு ஒன்றும் வேகாது. பல அரசியல் வில்லன்கள் இனத்துள்ளும் இனத்துக்கு வெளியிலும் வறுமை வாட்டம் என்ற துக்கம் தலைவர்கள் மூளையில்…புத்தியில் முத்திப்போய் உள்ளது. பல நாளிதழ்களில் செம்பருத்தியும் மலேசியா கினிக்கும் நாம் நன்றி சொல்ல்வோம். தனித்து முயற்சிக்கும் இவர்களின் அருமை பாராட்டுக்கு உயரியது வாழ்த்துவோம் ஆதரிப்போம். ஜி வி காத்தையா / நண்பர் ஆறுமுகம் இருவருக்கும் நமது சிறப்பு நன்றிகள். அவர்களின் வெட்டாத நேரலை இணைய ஒளிப்பரப்பு முயற்சியும் படைப்பும் ஊடக உரிமையின் புதிய பரிமாணம்தான். சபாஸ் !!
திரு James அவர்கள் சொல்வதும் சரிதான். திரு பொன் ரங்கன் அவர்களின் ஆதங்கமும் உண்மைதான். இருக்கும் சூழ்நிலையைக் கொண்டு நம் இந்தியர்களின் செயல்பாடு எவ்வாறு அமைய வேண்டும்? இதுவே தலையாய கேள்வியாக உள்ளது.
Dr. Xavier அவர்கள் இந்தியர்கள் ஒன்று பட வேண்டும் என்ற கருத்தை முன் நிறுத்தினார். இது அரசியல் அளவில் என்றே எடுத்துக் கொள்வோம். பூனைக்கு யார் மணி கட்டுவது?. தனேந்திரன், நல்லா கட்சிகளெல்லாம் தனி நபர், உறவினர் கட்சிகள். இவற்றைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. ம.இ.க. கட்சியினர் இந்தியர்கள் நலத்தைப் பேணுவோர் என்றால் IPF கட்சியை இணைத்துக் கொண்டு செயல் படலாம். ஆனால், IPF தலைவர்கள் தங்களுக்கு சிறப்பு சலுகையும், உரிமையும் கொடுக்கா விட்டால் வர மாட்டோம் என்று அடம் பிடிப்பார். இவர்களுக்கும் தன்மான மற்றும் சுயநல பிரச்சனைதான். இந்தியர்களைச் சார்ந்து நிற்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களிடையே இந்தியர்களின் பொதுநலம் மேலோங்க வில்லை என்றால் இக்கட்சிகள் ஒன்றுபடுவது கானல் நீரே. இதற்கு ம.இ.க. – வில் அடித்துக் கொண்டு சாகும் தலைவர்களும் தொண்டர்களும் எந்நாளும் வாய் திறப்பதில்லை. திறக்கப் போவதும் இல்லை. எல்லாம் கட்சியில் இருக்கும் தத்தம் பலத்தை இழந்து விடக் கூடாது என்ற சுயநலம்தான். மேலும். ம.இ.க. சாதிய பின்னனியில் செயல்படுவதால் இங்கும் முட்டுக் கட்டைதான் விழும்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து இந்தியர்கள் விடுபட வேண்டுமானால் மாற்று வழியாக நாம் அரசு சார்பற்ற அமைப்புகளை வலிமைப்படுத்தி இவர்கள் நேரிடையாக அரசாங்கத்திடம் இந்தியர்களுக்காக தமது பரிந்துரைகளை எடுத்துச் செல்ல வேண்டும். இது நடக்க சாத்தியமுள்ளது. எப்படி ஹிண்ட்ராப் ஒரு மக்கள் சக்தி வாய்ந்த NGO -வாக உருவெடுத்ததோ அதைப்போல இந்தியர்களைச் சார்ந்த உண்மையான NGO – க்களை ஒருங்கிணைக்க நமக்கு நம்பிக்கைக்குரிய தலைவர் தேவைப் படுகின்றார். இத்தகையோரே இந்தியர்களை ஒருமைப்படுத்த முடியும். ‘We need a social rights based third force where the elders and youngsters alike could contribute and share their ideas and resources to pull away the Indian community in this country from the doldrums’. Discard the cheap Indian politicians and their parties in order for the Indians to prevail in this country. மீண்டும் சிந்திப்போம்.
அட போங்கப்பா .
விவாத மேடையாவது மசாலா வடையாவது .
இவர்கலுக்கு ஜீரோ மார்க் ‘
காரணம் தலைப்புக்கும் இவர்களுக்கும் * நோ சம்மந்தம் *
ஹாய் அம் சாரி புரோஸ்.
எம்மினத்தின் ….
மேம்பாடு ….
சாமிவேலு … காலத்தில் !!!!
மாகாதிர் காலத்திதல் தமிழர்கள் ஏமாந்து போனார்கள் நஜிப் காலத்தில்
3 ஈனம்
ஏமாந்து போவர்கள்
ஹிண்ட்ராப் கணேசன் ,பி எஸ் எம் ஜெயக்குமார் புள்ளி விவரங்களுடன் பேசினார்கள் மற்றவர்கல் சொதப்பல்.பி என் தேவமனிக்கு நன்றி ஆழும்
கட்சியிளிருன்று வண்ததற்கு.பேசியவர்களுக்கும் ஒர்ங்கினப்பாளர் ஆறுமுகம் அவருக்கும் நன்றி. கத்தையா அய்யா பெசியிருண்டல் நன்றாக இருக்கும். நன்றி உங்கள் ஏற்பாட்டிற்கு.
தேவமணி 1972 ல் மாணிக்கா டேவான் பஹாசா மண்டபத்தில் சிலாங்கூர் ம.இ.கா மாநாட்டில் தமிழ் முரசு சொன்னதையே மீண்டும் சொல்கிறார். இவர் உயர் கல்விக்கு ம.இகாவிடம் விண்ணப்பமா செய்த மாணவர்களை தனியார் கல்லூரிகளுகு அனுப்பியும் சம்பாதித்தவர்