நன்றி, கெஅடிலான் வெற்றி மக்களின் வெற்றி

டாக்டர் சேவியர் ஜெயக்குமார், பிகேஆர் உதவித் தலைவர்,கிள்ளான் ஸ்ரீஅண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினர். மே9, 2015

 

 

பினாங்கு,  பெர்மாத்தாங் பாவ்  இடைத்தேர்தலில் கெஅடிலான் வேட்பாளர்  டாக்டர் வான்  அஸிஸா இஸ்மாயிலுக்கு வாக்களித்து வெற்றிபெறxavier வைத்த அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி, குறிப்பாக இந்திய வாக்காளர்கள் வழங்கிய தீர்ப்புக்கு மக்கள் கூட்டணியின்  நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

அவரின்  வெற்றி குடும்ப நலத்திற்காக அல்ல. நாடு எதிர்நோக்கும் பலதரப்பட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண்பதற்கு அவ்வெற்றி அவசியமாகும். அஸிஸாவுக்கு வாக்களித்து அவரை வெற்றிபெறச் செய்தது எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் மற்றும் இதர எதிர்க்கட்சி தலைவர்கள், அரசுசார்பற்ற இயக்கவாதிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலதரப்பட்ட மக்களை சிறையில் அடைத்தும், குற்றப்பதிவு விசாரணை, காவல் நிலையம்  மற்றும் நீதிமன்றத்துக்குமாக இழுத்தடித்து வருவதற்கு எதிராக மக்கள் அளித்த தீர்ப்பு ஆகும்.

 

இன்று மக்களும் நாடும்  எதிர்நோக்கும் பற்பல பிரச்சனைகளுக்குத் தவறான தலைமைத்துவமே காரணம்! செல்வம் கொழிக்கும் நாடான மலேசியா திவால் நிலையை நோக்கிச் செல்கிறது.

 

PPauvictoryஅதனால்  விளையும் துன்பங்களை மக்களே சுமக்க வேண்டும். அதன்  அடையாளமாகவே நம் மீது ஜிஎஸ்டி வரி சுமத்தப்பட்டுள்ளது, அதேவேளையில் பல  பொருட்களுக்கு வழங்கப்படு வந்த உதவித்தொகைகள் மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான கட்டணங்கள் உயர்ந்து வருகின்றன.

 

 

மக்கள் தீவிர இனம் மற்றும் சமய  அரசியலையும் வெறுக்கிறார்கள். ஆர்ப்பாட்டம்மிக்க சில இளையோர் அதிகக் கூச்சல்  இடுகிறார்கள். அது பெரும்பான்மை மக்களின் கருத்தாக இருக்க முடியாது என்பதனையும் இத்தேர்தல் முடிவு  உணர்த்துவதை  அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

 

முன்னைய தேர்தல்கள் போன்று இல்லாமல் இம்முறை ம.இ.காவின் தேர்தல்  இயந்திரம் செயல்படவில்லை என்பதனையும்  நாம் ஒப்புக்கொள்ளவே வேண்டும். இந்திய வாக்காளர்களை அதிகம் கொண்ட இடங்களில் ஐ.பி.எப், கிம்மா, பிபிபி, எம்ஐயுபி மற்றும் அரசுசார இயக்ககங்கள் என்று பல குட்டிப் பிரிவுகள் இறங்கி அரசியல் கோமாளித்தனங்களைக் காட்டினாலும் மக்களிடம்  அவர்களின் கோமாளித்தனம் எடுபடவில்லை.

 

நாடு மிக முக்கியமான காலக்கட்டத்தில் இருக்கின்ற வேளையில், மக்களின் அன்றாட வாழ்வும், எதிர்காலமும் கேள்விக்குறியாக விளங்கும் வேளையில், இந்திய சமுதாயத்தின் அதிகாரபூர்வப் பிரதிநிதியாக அமைச்சரவையில் இருவரைக் கொண்டுள்ள ம.இ.கா வழங்க முடியாத உத்தரவாதத்தை, சில கோமாளிகளைக் கொண்டு நிறைவு செய்ய அம்னோ பாடுபட்டது.

 

அரசியல் என்பது போராட்டங்கள், தியாகங்கள் முழு அற்பணிப்பை அடிப்படையாகக் கொண்டது. பெர்மாத்தாங் பாவ்  இந்திய வாக்காளர்கள, எடுப்பார் கைப்பிள்ளையோ, அரிசிக்கும், சீனிக்கும் மயங்கி 5க்கும் 10க்கும் ஆசைப்பட்டு  அரசியல் உரிமைகளை விற்கும் வீணர்களல்ல என்பதனை  வலுவாக நிலைநிறுத்தி விட்டனர்.

 

அம்மாதிரியான அவமதிப்புகளுக்கும், இகழ்ச்சிகளுக்கும் பெர்மாத்தாங் பாவ் இந்திய வாக்காளர்கள் சரியான ரீதியில் தீர்ப்பு வழங்கி விட்டனர். அதற்காக அவர்களின் விவேகமான, துணிவான, தீர்ப்புக்கு இந்த வெற்றி மாலையை சமர்ப்பிக்கிறோம்.