நிலம் வாங்கியது நல்லது என்றால் நஜிப் ஏன் அதை விற்கச் சொன்னார்?

kadirநிலம் வாங்கியது நல்லது  என்றால் நஜிப்  ஏன்  அதை விற்கச்  சொன்னார்?

தாபோங்  ஹாஜி  நிலம்  வாங்கியது  நல்ல  விசயமென்றால்  பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்  அதைத்  தற்காத்துப்  பேசியிருக்க வேண்டும்  என்கிறார்  மூத்த  செய்தியாளர்  ஏ.காடிர்  ஜாசின்.

நஜிப்பைத்  தொடர்ந்து  குறைசொல்லி  வருபவரான  காடிர்,  பிரதமர்  தாபோங்  ஹாஜியிடம்  அது வாங்கிய  நிலத்தை  விற்கச் சொல்வதும்  பிறகு  நிலம்  வாங்கப்பட்ட  செயலைப்  பாராட்டிப்  பேசுவதும்  வேடிக்கையாக இருக்கிறது  என்றார்.

“தாபோங் ஹாஜியிடம் நிலத்தை  விற்றுவிட  ஆலோசனை  கூறியவர்  பின்னர் நிலக்கொள்முதல்  ஒரு  நல்ல  செயல்  என்றும்  அதனால்  தாபோங்  ஹாஜிக்கு  நிறைய  ஆதாயம்  கிடைத்திருக்கும்  என்றும்  சொல்வது  வேடிக்கையாக  இருக்கிறது.

“நிலம்  வாங்கியது  தாபோங் ஹாஜிக்கு  நல்லது  என்றால்  அவர்  அதைத்  தற்காத்துப்  பேசியிருக்க  வேண்டும், விற்கச் சொல்லியிருக்கக்  கூடாது”, என்று  காடிர்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.