நஜிப்புக்கு எதிராக சதியா?: நஸ்ரி மறுப்பு

nazriசுற்றுலா  அமைச்சர்  நஸ்ரி  அப்துல்  அசீஸ்,  மிலானின்  துணைப்  பிரதமர்  முகைதின்  யாசினைச்  சந்தித்து  பிரதமர்  நஜிப்பைக்  கவிழ்க்கத்  திட்டமிட்டார்  என்று  கூறப்படுவதை  மறுத்தார்.

தாம்  இருக்கும்  இடத்தை  நஜிப்  அறிவார்  என்று  நஸ்ரி  தெரிவித்தார். ஏனென்றால், தமது  துபாய், மிலான்  பயணங்களுக்கு  ஒப்புதல் அளித்ததே  அமைச்சரவைதான்  என்றாரரவர்.

“இஸ்தானா  புடாயா  நடனக் குழு  ஒன்றின்  நிகழ்ச்சியில்தான்  முகைதினைத்  தற்செயலாகச்  சந்தித்தேன்”, என  நஸ்ரி  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

நேற்று,  முகைதின், நஸ்ரி,  முஸ்தபா  முகம்மட்,  முன்னாள்  நிதி  அமைச்சர்  டயிம்  சைனுடின்  முதலானோர்  இத்தாலிய  நகரில்  கூடி  நஜிப்புக்கு  எதிராக  சதித்  திட்டம்  தீட்டினார்கள்  என்று முன்னாள்  சட்ட  அமைச்சர்  சைட்  இப்ராகிம்,  கூறினார்.

அது  ஒரு  வட்டாரத்திலிருந்து  கிடைத்த  செய்தி  என்றும்  அது  உண்மையான  செய்தி  என்பதற்குத்  தம்மால்  உத்தரவாதம்  அளிக்க  இயலாது  என்றும்  சைட்  கூறினார். அது  உண்மையாக  இருக்குமானால்  அது  ஒரு  தவறான  செயலாகும்  என்றாரவர்.