நாடாளுமன்றப் பொதுக் கணக்குக்குழு(பிஏசி) 1மலேசியா மேம்பாட்டு நிறுவனம்(1எம்டிபி) மீதான புலனாய்வை மே 19-இல் தொடங்கும்.
அதில் முதலில் சாட்சியம் அளிக்க கருவூல தலைமைச் செயலாளர் இர்வான் சிரிகார் அப்துல்லாவும் பொருளாதாரத் திட்டமிடல் பிரிவு(இபியு) தலைமை இயக்குனர் ரஹ்மாட் பீவி அப்துல்லாவும் வருவார்கள் என பிஏசி தலைவர் நூர் ஜஸ்லான் முகம்மட் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் தலைவரும் தலைமை செயல் இயக்குனருமான அருள் கந்தாவும் 1எம்டிபி-இன் முதல் தலைமை செயல் அதிகாரியான ஷாருல் இப்ராகிம் ஹல்மியும் பிஏசி உறுப்பினர்களைச் சந்திப்பர்.
ஷாருல் 2009 மார்ச் மாதம் தொடங்கி 2013 மார்ச்வரை 1எம்டிபி சிஇஓ-வாக இருந்தார். அதன் இவ்வாண்டு தொடக்கத்தில் அருள் பொறுப்பேற்றார்.
“அரசாங்கத்துக்குச் சொந்தமான அந்நிறுவனத்தின் செயல்பாடுகள் நிதி ஆதாரங்கள் குறித்து கவலை கொண்டிருக்கும் மக்களிடையே பலப்பல தோற்றப்பாடுகளும் ஊகங்களும் நிலவுகின்றன”, என்று நூர் ஜஸ்லான் ஓர் அறிக்கையில் கூறினார்.
பிஏசி அவ்விவகாரத்தை முழுமையாக புலனாய்வு செய்ய விரும்புகிறது என்றும் அதனால் புலனாய்வுக்கு முடிவுத்தேதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் அவர் சொன்னார்.
தரமில்லாத சுயநல அரசியல் தலைவர்களால், நமது நாடு சீரழிகிறது.