சரவாக்கில் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கிய மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) அம்னோ அமைச்சர்களின் உதவியாளர்களையும் விசாரிக்க வேண்டும் என்று விரும்புகிறார் அம்னோ தொகுதித் தலைவர் ஒருவர்.
தம் பெயரை வெளியிடக் கூடாது என்ற நிபந்தனையுடன் மலேசியாகினியிடம் பேசிய அவர், அமைச்சர்களின் அரசியல் மற்றும் தனிச் செயலாளர்களில் சிலர் வரவுக்குமீறிய வசதிகளுடன் வாழ்வதாகக் கூறினார்.
“ஆடம்பரத்தில் திளைக்கும் அளவுக்கு அவர்களுக்கு எங்கிருந்து வருமானம் வந்தது. அவர்களுக்கு வருமானத்தைத் தரும் மூலாதாரங்கள் எவை?
“ஆடம்பர வீடுகளை வைத்திருக்கிறார்கள். அவர்களின் சம்பளத்தை வைத்து அவற்றை வாங்கியிருக்க முடியாது.
“ஒரு வதந்தி என்னவென்றால்……சிலர் அவர்களின் ‘போஸை’ச் சந்திக்க விரும்புவார்களாம். அதற்கு ஏற்பாடு செய்தால் அவர்களுக்குச் ‘சலுகைகள்’ கிடைக்குமாம்.”, என்றாரவர்.
சில பெயர்களையும் அவர் குறிப்பிட்டார். அவற்றை வெளியிடுவதற்கில்லை.
பிரதமர்துறை செயலாளர்களும் இதில் சேர்த்தியாம்.
கட்சிக்குக் களங்கத்தை உண்டுபண்ணும் இப்படிப் பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அந்த அம்னோ தலைவர் வலியுறுத்தினார்.
“அவர்கள் அம்னோவை அழிக்கிறார்கள்”, என்றுரைத்த அவர் அவர்களின் சொத்து விவரங்களைப் பொதுவில் அறிவிக்கும்படிச் செய்வதுகூட நல்லதுதான் என்றார்.
அப்படியே ம.இ. கா. அமைச்சர்களின் உதவியாளர்களையும் எம் எ சி சி கவனித்தால் நல்லா இருக்கும் ! இவர்களும் நான்கு ஐந்து வீடுகளுடன் ஏக போகமாக வாழ்வதாக தகவல் !! ஹிஹிஹிஹிஹி எல்லாம் ஓர் வைதெரிச்சல் தான் .
தைரியமாக அம்நோவுக்கே தெரிவிக்க வேண்டியதை தைரியமில்லாமல் மக்களிடம் சொல்லும் இத்தகைய போக்கனா தலைவர்கள்தான் அம்னோ, ம.இ.க. போன்ற கட்சிகள் அழிய உதவுகின்றார்கள். இவர்கள் நல்லவர்களா?
இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. வீணே ஏன் இந்த விவகாரத்தை கிளப்பி நேரத்தை வீணடிக்கிறீர்கள்? இதெல்லாம் சின்ன விஷயம். 1MDB கணக்கில் 27 பில்லியன் காணோமாம். அதை கவனிங்க.
தலைவரே! குமுற வேண்டாம்! உங்களுக்கும் காலம் வரும்! அது வரை பொறுமையைக் கடைப் பிடியுங்கள்!
அடே பரவாயில்லையே அமைச்சர்களின் உதவியாளர்கள் பணத்தில் புரளுவது லஞ்ச ஒழிப்பு இலாகாவுக்கு இப்பொழுதாவது தெரியுதே. நம்ம மா இ கா தலைவர்கள் கதை வேறு. இப்பொழுது ஒரு புது கதை உலவுகிறது. சுகாதார அமைச்சின் தலைமை செயலாளர் (மலாய்காரர்) வரும் ஜூன் மாதம் பதவி ஓய்வு பெறுகிறார். இப்பதவிக்கு இந்திரை நியமிக்க அரசாங்கம் தாரை உள்ளது, ஆனால் நமது நலனில் அக்கறை உள்ள அமைச்சர் இந்திர வேண்டவே வேண்டாம் என்று ஒற்றைக்காலில் நிர்க்கிரராம்.
இதுவே ஓர் அமைச்சின் உயர்ந்த அரசாங்க பதவியாகும். இப்பொழுதைக்கு இந்நாட்டில் ஒரு பஞ்சாபியரும் ஒரு சரவாக்கியரும் மட்டுமே உள்ளனர். மற்றவர்களெல்லாம் மலாய்காரர்களே. ஒரு சீன அமைச்சர் ஒரு சீனர்தான் வேண்டும் என்று கேட்கிறார், சரவாக்கிய அமைச்சர் ஒரு சரவாக்கியன் தன வேண்டும் என கேட்டு மற்றுகின்றனாறாம். ஆனால் நமது அமைச்சர்? இது நாயமா? அமைச்சரிடம் கேட்டு சொல்லுங்கள்.
ஊழல், லஞ்சம், அதர்மம் இவற்றின் மறுபெயர் அம்னோ… யாராவது அகராதி தொகுக்க விரும்பினால் அம்னோ என்ற சொல்லுக்கு ‘ஊழல், லஞ்சம், அதர்மம்’ என்று அர்த்தம் எழுதலாம்.
பழைய குட்டையின் மறு சுழற்சி.புதிய அத்தியாயாம் ஒன்றும் இல்லை.
மக்கள் மாறவில்லை எப்பொழுதும் இந்த நிலைதான். ஆட்சியாளர்கள் கொண்டாட்டம் மக்கள் திண்டாடம்.
James , நீங்கள் சொல்லுவது உண்மையானால் , இந்த நற்றிகேட்ட அமைச்சரின் செயல் ஊடகம் வாயிலாக அணைத்து இந்தியரும் செய்ய வேண்டும்…..
கொஞ்சம் கூட சமுதாய எண்ணம் இல்லாதவனெல்லாம் இந்திய சமுதாயம் புறக்கணிக்க வேண்டும்.