டாக்டர் மகாதிர் மலேசிய மண்ணுக்குத் திரும்பியதுமே பிரதமர் அப்துல் ரசாக்மீது தாக்குதல் தொடுக்க வேண்டாம் என்று நினைத்தார் போலும்.
நஜிப்பைப் பற்றிக் கேட்டதும் “பிறகு பார்ப்போம்”,என்று புன்சிரிப்புடன் கூறிவிட்டார்..
முன்னாள் பிரதமரும் அவரின் துணைவியார் டாக்டர் சித்தி ஹஸ்மா அலியும் உம்ரா கடமையை நிறைவேற்றிவிட்டு இன்று பிற்பகல் நாடு திரும்பினர்.
சுமார் 100 ஆதரவாளர்கள் அவர்களை வரவேற்க சுபாங் ஸ்கைபார்க் வந்திருந்தனர்.
அவர்களில் முன்னாள் சட்ட அமைச்சர் சைட் இப்ராகிம், அம்னோவின் கைருடின் அபு ஹசான், பெர்காசா தலைவர்கள் ஆகியோரும் இருந்தனர்.
அவரின் ஆதரவாளர்கள் மகாதிரை வரவேற்கும் பதாகைகளை ஏந்தியிருந்தனர். ஒன்றில் “Selamat Pulang ke Tanah Air Pahlawan Negara (தேசிய வீரரே, வருக) என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.
மகாதிமிர் பதவியில் இருந்திருப்பாரேயானால், 10,000 பேர் கூடியிருப்பர். பாவம். நாற்காலி இல்லையென்றால், நாதாரியாகிவிடுகிறோம். ஒரு பழைய பாடல்: ” அவங்க பக்கமிருந்தா உங்கள மந்திரி என்பான், அவங்க பக்கமில்லாட்டி உங்கள எந்திரி என்பான், ஊர் பணத்த திங்காதே சங்கரலிங்கம், நீ தின்னுப்புட்டா உன் பேரு திங்கிரலிங்கம்.” மகாதிமிர் ஒரு செல்லா காசு. அவருடைய மகன் உயர் பதவிக்கு வரும் வாய்ப்பிருப்பதால், அவரைச் சுற்றி நாலு பேர். இல்லாவிட்டால், இவரை விட நல்ல மனிதர் அப்துல்லா படாவியின் நிலையை பாருங்கள், ஒரு பய அவரின் பக்கத்தில் காணோம்.
இந்த மனிதரை …..
சும்மா விடுங்காப்பா …
ஓய்வுக்குப் பின் ….
விடையம் பகர்வார் ..!!
சிங்கம் 3