உங்கள் கருத்து ‘அரசியல் செயலாளர்கள்மீது. ஏன் நடவடிக்கை? எஜமானர்கள் சொல்வதைத்தானே அவர்கள் செய்கிறார்கள்’
அமைச்சர்களின் உதவியாளர்கள் பணத்தில் புரள்கிறார்கள்
ஆர்சிஎஸ்: மலேசியாவில் கேட்பார் மேய்ப்பாரின்றி ஊழல் ஆட்சி செய்கிறதாம். நமக்கு எப்பவோ தெரிந்த ஒரு விசயத்தை அந்த அம்னோ உறுப்பினர் இப்போ சொல்கிறார். மிகப் பெரிய கொள்ளை நடப்பது பிரதமரின் பார்வையில் 1மலேசியா மேம்பாட்டு நிறுவனத்தில் (1எம்டிபி). அம்னோ அகற்றப்படுவதற்குமுன் உதவியாளர்களும் மற்றவர்களும் முடிந்ததைச் சுருட்டிக்கொள்ளப் பார்க்கிறார்கள்.
அதனால்தான் அம்னோ முற்றாக அழிக்கப்பட்டு புதிய தலைவர்கள் பொறுப்பேற்க வேண்டும்.
ஓ யா: மலேசிய ஊழல்-தடுப்பு ஆணையம்( எம்ஏசிசி) நெத்திலி மீன்களைப் பிடிப்பதற்குத் தென்சீனக் கடலைத் தாண்டிச் சென்றிருக்க வேண்டியதில்லை. புத்ரா ஜெயா ஏரிகளில் நீந்தித் திரிந்தாலே பெரிய, சின்ன முதலைகளை எளிதாகப் பிடிக்கலாமே.
கவனிப்பாளன்: இது ஓர் உண்மைக்கதை. பலநாட்டு நிறுவனத்தின் பணியாளர். ஜான் என்று அவரை அழைப்போமே.
ஜானிடம் ஒரு அரசியல் செயலாளர், அவரது நிறுவனம் ஒரு திட்டத்துக்கான குத்தகையைப் பெற வேண்டுமென்றால் அமைச்சருக்கு சில மில்லியன்கள் கொடுக்க வேண்டியிருக்கும் என்றார்.
ஜான் குறிப்பிட்ட தொகையை அரசியல் செயலாளரிடம் கொடுத்தார். ஆனால், குத்தகை வேறொருவருக்குச் சென்று விட்டது. ஜானுக்கு வேலை பறிபோயிற்று.
அந்த அரசியல் செயலாளர், இதே உபாயத்தைப் பயன்படுத்தி இன்னும் எத்தனை பேரிடம் பணம் பறித்தாரோ, எவ்வளவை அவர் வைத்துக் கொண்டாரோ, எவ்வளவு அமைச்சருக்குப் போனதோ, யாமறியோம்.
காஜி பூத்தா: இதற்கு எம்ஏசிசி-இடமிருந்து வழக்கமான பதில் வரும்- நாங்கள் நடவடிக்கை எடுக்க ஆதாரம் தேவை.
வாட்ஸப்: எம்ஏசிசி, மீன்குஞ்சுகளுக்குப் பதிலாக சுறாமீன்களையும் திமிங்கிலங்களையும் தேடிப் போங்கள். ரிம4 மில்லியன் பிச்சைக் காசு. மீன்குஞ்சுகளுக்கே இவ்வளவு கிடைத்தால் சுறாமீன்களுக்கும் திமிங்கிலங்களுக்கும் எவ்வளவு கிடைக்கும்!
வீண் பேச்சு போதும்: அம்னோ பாரு அமைச்சர்கள் பெரும் பணம் சம்பாதிக்கிறார்கள், வருமானத்துக்குமீறிய வாழ்க்கை வாழ்கிறார்கள். எம்ஏசிசிக்குத்தான் பார்ப்பதற்குக் கண்ணில்லை, கேட்பதற்குச் செவி இல்லை, அதைப் பற்றிப் பேசவும் துணிவில்லை.
மலேசிய வரலாற்றில் வெட்கப்படத்தக்க இத்தனை ஊழல்கள் இதற்குமுன் நடந்ததில்லை.
பி.தேவ் ஆனந்த் பிள்ளை: எம்ஏசிசி ஒரு கோமாளி. எதிரணியினரையும் தங்கள் அரசியல் எஜமானர்களுக்கு ஆபத்தானவர்களையும் மிரட்டுவதுதான் அதன் வேலை. அதனால் நீங்கள் பெரிய பூனையின் உதவி ஆளா, அள்ளி அள்ளி அனுபவிக்கலாம்.
அந்தாராபங்சா: விசாரணை உதவியாளர்களிடம் மட்டும்தானா. அமைச்சர்கள், துணை அமைச்சர்களையும் விசாரிக்க வேண்டும். முக்கியமாக…….
தலைவெட்டி: இது எல்லாருக்குமே தெரியும். முறையான வழிகளில் கடைவீடுகள், வணிகக் கட்டிடம் கட்டுவதற்கு அனுமதிக்கு விண்ணப்பம் செய்யுங்கள். கிடைக்கிறதா, பாருங்கள்.
ஊஹூம். கிடைக்காது. பல்லாயிரக் கணக்கில் வாரி வழங்க தயாராக இருக்க வேண்டும். அந்த இடத்தில்தான் இந்த அரசியல் கைக்கூலிகள் உதவ வருவார்கள்.
கொசுமூளை: சந்தேகத்துக்குரியவர் பிஎன் தொடர்புள்ளவராக இருந்தால் எம்ஏசிசி- யால் உடனடி நடவடிக்கை எடுத்துவிட முடியாது. மேலிடத்தின் ‘பச்சை விளக்கு’க்காகக் காத்திருக்க வேண்டும்.
மேலும், நடவடிக்கை தொடர்ந்தால் நிலைமை மோசமாகலாம். எம்ஏசிசி-யைப் பொறுத்தவரை தொல்லை- அற்ற வாழ்க்கை வாழ விரும்புகிறது. தேன்கூட்டைக் கலைக்கவும் வேண்டாம் கொட்டுப்படவும் வேண்டாம் என்பதே அதன் வாழ்க்கைச் சித்தாந்தம்.
பெயரிலி #19098644: எம்ஏசிசி அழுகிப் போய்க்கொண்டிருக்கும் முதல் குடும்பத்திலிருந்து விசாரணையைத் தொடங்க வேண்டும். அது இப்போது தாய்லாந்தில் பொன்ஸி திட்டத்தைத் தொடங்கியதன் மூலம் அனைத்துலக அளவில் பிரபலமாக விளங்குகிறது.
அதன்பின்னர் அமைச்சர்களின் குடும்பங்களுக்குச் செல்ல வேண்டும். அவர்களின் பிள்ளைகள் பணத்தை வாரி இறைத்துச் செலவு செய்கிறார்கள். செயலாளர்களுக்கு மட்டும் வலைவீசுவது எதற்காக? எஜமானர்கள் சொல்வதைத்தானே அவர்கள் செய்கிறார்கள்.
என்எக்ஸ்: எஜமானர்களுக்குக் ‘கமிசன்’ ஏற்பாடு செய்து கொடுப்பதுதான் இவர்களின் வேலை. இது அனைவருக்கும் தெரிந்த விசயம். எம்ஏசிசிக்கு மட்டும்தான் தெரியவில்லை.
டாக்: எம்ஏசிசி விசாரிக்கும் என்று நினைக்கிறீர்கள்? அப்படி எதுவும் நடக்காது. பார்த்துக் கொண்டே இருங்கள், விசாரிக்க முடியாது என்பதற்கு ஏதாவது குருட்டுத்தனமான காரணத்தைக் கூறுவார்கள், .
நஜிப், அரசாங்கச் செலவைக் குறைக்கும் நடவடிக்கையாக எம்ஏசிசி-யை மூடி விடுவது நல்லது. எம்ஏசிசிக்குச் செலவிடும் பணம் 1எம்டிபி வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்த உதவும்.
நெத்திலியைப் பிடிப்பதற்குத் தான் அவர்கள் தகுதி பெற்றவர்கள்! சுறாமீனைப் பிடிப்பதற்கு வெளிநாடுகளிலிருந்து தான் நிபுணர்களைக் கொண்டு வரவேண்டும்!
சிறிய நெத்திலி மீன் பிடிப்பது ஒரு சுவையான அனுபவம்!.
நெத்திலி பிடிப்பது ஆபத்தில்லை சுராவை பிடித்தால் எம்எசிசியை கொண்ருவிடிடும்.
ரோச்மாஹ் …………….கை வைக்க வக்கிலாத ………..மவனுங்க்கதான் இந்த MACC
முன்பு பதவியில் இருந்தவர்கள் கொள்ளையடித சொத்துக்களை திரும்ப பெற்றால் போதும்
இவர்கள் குருட்டு கண்முன் பல யானைகள் வளம் வருகின்றன ஆனால் எறும்புகளை பிடித்து உலக சாதனை படைத்தது விட்டார்கள் ???????????
ரோச்மாஹ் வுக்கு விளங்கும் நஜி..க்கு விளங்கும் போடுங்கள் இந்த நாடே உங்களை பாராட்டும்