நேற்று கிள்ளானில் அம்னோ சிலாங்கூர் உறுப்பினர்களிடம் பேசிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், “1எம்டிபி-இன் ரிம42 பில்லியன் எங்கும் காணாமல் போகவில்லை. அது துன் அப்துல் ரசாக் இணைப்பு மையத்தில்(TRX) 70 ஏக்கர் நிலமாகவும் பண்டார் மலேசியாவில் 500 ஏக்கர் நிலமாகவும் இருக்கிறது” என்றார்.
முதலில், TRX, பண்டார் மலேசியா நிலங்களின் பெறுமதி ரிம42 பில்லியனுக்குக் கிட்டத்திலாவது வருமா என்று வினவுகிறார் பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா.
2014 மார்ச் 14-இல் 1எம்டிபி வெளியிட்ட நிதி அறிக்கைகளின்படி அவ்விரண்டு நிலங்களின் மதிப்பே ரிம5.83 பில்லியன்தான். ரிம5.83 பில்லியன் ரிம42பில்லியன் கடனுக்கு ஈடாகுமா? அவ்விரண்டு நிலங்களும் ரிம2 பில்லியனுக்கு வாங்கப்பட்டனவாம்.
1எம்டிபி பினாங்கில் ஒரு நிலத்தை ரிம1.27பில்லியனுக்கு வாங்கியது உண்மை. அத்துடன் ரிம10.9 பில்லியன் மதிப்புள்ள மூன்று மின் தயாரிப்பு நிறுவனங்களையும் அது வாங்கியது.
இந்த முதலீடுகளையெல்லாம் கூட்டிப் பார்த்தால்கூட ரிம14 பில்லியன்தான் ஆகிறது. அப்படியானால் ரிம42 பில்லியனில் மீதமுள்ள ரிம28 பில்லியனுக்குக் கணக்கு எங்கே என்று புவா வினவினார்.
அட மட மலேசியா மக்களே இந்த நஜி 42 பில்லியோனையும் முழுங்கி ரீல் விடறான் இதையும் மட bn நக்கிகளுக்கு கேட்க நாக்கு செத்து போயி நஜி கொடுக்கும் எலும்பு துண்டுக்கு அலைந்து மக்களை GST மூலம் கஷ்டபடுத்தாருணுங்க