மங்கோலிய பெண் அல்தான்துயா கொலை நடந்து எட்டு ஆண்டுகளாகி விட்டன. முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் ஏன் அது குறித்து கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார் என்று பிரதமர் நஜிப் திருப்பிக் கேட்கிறார்.
ஏன் செல்வாக்குமிக்க சில தனிப்பட்டவர்கள் தம்மை சிக்கவைப்பதற்காக இந்த வழக்கிற்கு புத்துயிர் அளிக்கின்றனர் என்று நஜிப் வினவினார்.
“(நஜிப் அதில் சம்பந்தப்பட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டுகளை) அவர்கள் உண்மை என்று நம்பினால், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அப்பிரச்சனை எழுந்த போது ஏன் அவர்கள் அதனைக் கேட்கவில்லை? ஏன் இப்போது?”, என்று நஜிப் கேட்டார்.
அவ்வழக்கை அரசாங்கம் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்பதில் நியாயமில்லை. நீதித்துறை நடவடிக்கைகள் முடிவுற்று விட்டன என்று அவர் மேலும் கூறினார்.
“நான் சம்பந்தப்படவில்லை. அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அக்கொலையில் யார் குற்றவாளி என்பதை நீதிமன்றம் தீர்மானித்து விட்டது. அடத்துடன் அக்கதை முடிவுக்கு வர வேண்டும்”, என்றாரவர்.
கொலைக்கான காரணம் யாது?? இந்தக் கொலைக்காரர்களை ஏவி விட்டது யார் என்பதைத்தான் அனைவரும் அறிய விரும்புகின்றனர்.!!!! எய்தவனிருக்க அம்பை நோவதேனோ????
ஏன் மகாதீர் கிளறுகிறார் ? எல்லாம் ஒரு உள் நோக்கம்தான் , ஹிஹிஹிஹி .
மங்கோலிய பெண் அல்தான்துயா கொலை நடந்து எட்டு ஆண்டுகளாகி விட்டன. முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் ஏன் அது குறித்து இப்போது கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார்.அன்வர் வெளியில் இருந்தால் மகாதீர் வாயை மூடி கொண்டு இருப்பார் அன்வாரை அடக்க ஒரேஆள் பிரதமர் நஜிப் மட்டும்தான் மகாதீர்க்கு தெரியாதா என்ன? …..இனி எல்லாம் விதி விட்ட வழி சம்போ மகாதேவா.
பிரதமர் அவர்களே நல்ல அடி,ஆனால் மகாதீருக்கு இது போதாது. நீதி மீது அக்கறை இருந்தால், வேண்டியவர் / வேண்டாதவர், அல்லது ஆதரிக்கும் காலம் / எதிர்க்கும் காலம் என்றும், தனது தேவைக்கு ஏற்ப எவரும் செயல்பட வேண்டும், மீறினால் தூற்றுவேன் என்ற எண்ணம் எல்லாம் இருக்க கூடாது.
அல்தாந்துயா ஆவி ஆத்மா சாந்தி அடைந்ததோ இல்லையோ ! நஜிப்பை ஒழிக்காமல் மகாதிமிர் ஆன்மா ஓயாது ! முக்ரிஸ் துணை பிரதமர் ஆகும் வரை !
“கொலைக்கான காரணம் யாது?? இந்தக் கொலைக்காரர்களை ஏவி விட்டது யார்??” என்றுதானே மாமா மகாதீர் கேட்கிறார்.
அதற்கு பதில் சொல்ல தயங்கும் அல்லது தடுமாறும் தற்போதைய பிரதமர், மாமா மகாதீரின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், நான் சம்பந்தபடவில்லை, புனித நுலின் மீது சத்தியம் செய்துள்ளேன் என்று கேளிவிக்கு சம்பந்தம் இல்லாத பதிலை கூறி, தற்போதைய பிரதமர் தானாகவே இக்கொலையில் ஏன் தன்னை சம்பந்தபடுத்தி கொள்கிறார் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.
எட்டு ஆண்டுகளாக இந்தப் பிரச்சனை எழுப்பப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அப்போது இருந்தே அதற்கு சரியான பதில் இல்லை.
மகாதிர் இப்போது எழுப்பவதற்கு அவருடைய நேரம் இப்போது தான் வந்திருக்கிறது!
மகாதிமிர் ! எதிர் கட்சிகள் செய்யும் சேவையை முழுமையாக குத்தகைக்கு எடுத்துக்கொண்டார் ! டோனி பூவா , ரபிசிக்கு சற்று ஓய்வு கிடைத்து இருக்கிறது !
ஐயா சட்டப் புர்வமாக ஒரு கிரிமினல் வழக்கு எத்தனை ஆண்டுகளானாலும் மறுபடியும் விசாரிக்க இடம் உண்டு. இந்த கொலையின் பின்னணியில் இருந்தவர்கள் இன்றுவரை அறியபடவில்லை. காரணம்……
அடே நஜி கடவுள் எட்டு ஆண்டு உன்னை வைத்ததே பெரெய்ய பாவமட உனக்கு counting ஆரம்பம்தா தலையனே
உண்மையான
உண்மையான கொலைக்காரன் தப்பிவிடக்க்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் இருக்கும் .
நிரபராதி தண்டனை பெற கூடாது .
குற்றவாளி தப்பிவிடக்கூடாது .
மகாதீர் கிடிக்கிபிடிளிருந்து தப்புவதற்குதெரிந்தால் சொல்லி விட்டுதான்போங்களேன் !