பாஸ் தேர்தலின்போது மிதவாதக் கட்சியாக மாறலாம்

low aபொதுத்  தேர்தலின்போது  பாஸ்  அதன்  தீவிரவாதப்  போக்கை மாற்றிக் கொள்ள  முயற்சி  செய்யும்  என்பதால்  அந்த  இஸ்லாமியக் கட்சியும்  டிஏபியும்  கருத்துவேறுபாடுகளை   மறந்து  ஒத்துழைக்கும்  சாத்தியம்  உண்டு  என்கிறார்  அரசியல்  ஆய்வாளர்  லோ  சீ  சோங்.

“அடுத்த  வாரம்  கட்சித்  தேர்தல்கள்  என்பதால்  பாஸ் பழமைப்  போக்கை  விடாமல்  பிடித்துக் கொண்டிருக்கிறது.

“அதன்பின்  அது வாக்காளர்களைச்  சந்திக்க நேரும். அப்போது  முஸ்லிம்- அல்லாத  வாக்காளர்களை- குறிப்பாக  சிலாங்கூர்,  பேராக், ஜோகூர்  ஆகிய  மாநிலங்களில் உள்ளவர்களைக்  கவர  அது  மிதவாதப்  போக்கைக்  கடைப்பிடிக்க  வேண்டியிருக்கும்”. நேற்றிரவு  ‘தியானான்மென் சதுக்க  படுகொலை’  நினைவாக  நடைபெற்ற  ஒரு  கருத்தரங்கில்  லோ  இவ்வாறு  குறிப்ப்பிட்டார்.

இரு கட்சிகளும்  தங்களுக்கிடையிலான  கருத்துவேறுபாடுகளைப்  போக்கிக்கொண்டு  ஒத்துழைத்தாலும்  பாஸ் தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்கும்  டிஏபி  தலைமைச்  செயலாளர்  லிம்  குவான்  எங்-கும் சர்ச்சையை  மறந்து  ஒன்றுசேர்வது  கடினம்  என்றும்  லோ  கூறினார்.