மலேசியாவில் ஒரு கட்சி பிரதமரை நியமிப்பதைவிட வாக்காளர்களே பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் நிலை உருவாக வேண்டும் என்கிறார் அம்னோ எம்பி தெங்கு ரசாலி ஹம்சா.
“மற்ற வகை அரசாங்க முறைகளையும் ஆராய்ந்து அவற்றில் எது சிறந்தது என்பதைக் கண்டறிய வேண்டும்.
“தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரைப் பெற்றிருப்பதுகூட நல்லதுதான். கட்சியால் ஒருவர் முன்னிறுத்தப்படுவதைவிட இது சிறந்தது”, என இன்று பெட்டாலிங்கில் பேசியபோது தெங்கு ரசாலி கூறினார்.
இப்போது பின்பற்றப்படும் வெஸ்ட்மின்ஸ்டர் முறை இனியும் நாட்டுக்கு நல்லதல்ல என்றாரவர்.
வரவேற்கிறேன் உங்கள் கருத்தை.
அருமையான யோசனை. திருடனுங்க ஒத்துக் கொள்ள மாட்டானுங்க.
இவருக்கென்ன பைத்தியமா? நம் நாட்டுக்கும், அரசியல் பெருச்சாளிகளுக்கும் ஒத்துவாராத விஷயத்தை கிளறுகிறார். இது என்ன ஜனநாயக நாடு என்கிற நினைப்பா இவருக்கு?