எல்லையில் 10 ஆண்டுகளாக ஆள்கடத்தல் நடந்து வருகிறது

smuggleமலேசிய-தாய்லாந்து  எல்லையில்  ஆறு  குறுக்குப்  பாதைகள்  மனிதர்களையும்  பொருள்களையும்  கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டு  வருகின்றன.

“மலேசிய-தாய்லாந்து  எல்லையில் உள்ள  பாதைகளை  இரு  பக்கங்களில்  வசிக்கும்  மக்கள் பயன்படுத்திக்கொண்டு  தங்களுக்கிடையில்  உறவுகளை  வலுப்படுத்திக்  கொண்டிருந்தார்கள்.

“சில  இரகசிய  குழுமங்கள் அவற்றை அவர்களுக்குச்  சாதகமாக  பயன்படுத்திக்  கொண்டார்கள்”, என்று  கம்போங்  சைட்  ஒமார்   கிராம  மேம்பாடு  மற்றும்  பாதுகாப்புக்  குழுத்  தலைவர்  நோர்  மஹிசான் காசிம்  கூறினார்.

பெல்க்ரா  லூபோக்  சீரே,  பெல்டா மாத்தா  ஆயர்,  லாடாங்  தெபு  சுபிங்,   வாங்  கெலியான், கம்போங்  சைட்  ஒமார்/ கம்போங் பூத்தே  ஆகிய  இடங்களில்  இந்தப் பாதைகள்  உள்ளன.

“எல்லைப்பகுதியில்  பாதுகாப்பு கெடுபிடி  இல்லை. இதற்கு  அதிகாரிகளின்  பலவீனம்  காரணமல்ல. இரு நாட்டு  மக்களிடையேயும்  நெருக்கமான  உறவு  உள்ளது  என்பதால்  ஒருவித  நெகிழ்ச்சி  கடைப்பிடிக்கப்பட்டது.

“மேலும், உள்ளுர்  மக்களும்  தாய்லாந்து  நாட்டவரும்  இருதரப்பு  வணிகத்திலும்  ஈடுபட்டிருந்தனர்”, என  நோர்  மஹிசான் கூறினார்.

-பெர்னாமா