வரும் வெள்ளிக்கிழமை, சமூக அமைப்புகளும் குடிமக்களும் ஒரு கலந்துரையால் நிகழ்வில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் கேள்விகளால் துருவித் துருவி விசாரிக்க வாய்ப்பைப் பெறுவார்கள்.
அந்நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கும் வழக்குரைஞர்களைக் கொண்ட அமைப்பான சுகாகுவாம், நஜிப்பைப் பற்றியும் அவரது ஆட்சி பற்றியும் கேள்வி கேட்க நிறைய வாய்ப்பளிக்கப்படும் என்று கூறியது.
சமூக ஆர்வலர்களும் பொது மக்களும் 1எம்டிபி, தாபோங் ஹாஜி நிலக் கொள்முதல் உள்பட எந்த விவகாரம் பற்றியும் நஜிப்பிடம் கேள்வி கேட்கலாம் என்று அதன் தலைவர் கைருல் அன்வார் ரஹ்மாட் தெரிவித்தார்.
கலந்துரையாடலில் இடம்பெறும் கேள்வி-பதில் அங்கத்துக்கு ‘ஒளிப்பதற்கு ஒன்றுமில்லை’ எனப் பெயரிடப்பட்டுள்ளது
இதற்கு எவ்வளவுடா வாங்கனீங்க?.
கேள்வி-பதில் அங்கத்தில் ஒளிப்பதற்கு ஒன்றுமில்லை என்று சொல்லும் போதே ஒளிப்பதற்கு நிறைய சமாச்சாரங்கள் இருக்கின்றன என்றே தோன்றுகிறது! ஆமாம்! கூடவே ஒரு பெரிய போலிஸ் படையை வைத்துக்கொண்டு, அம்னோ குண்டர் கும்பலை வைத்துக்கொண்டு யார் கேள்வி கேட்பது? யார் பதில் சொல்லுவது? மக்களின் வரிப்பணம் தான் வேஸ்ட்!