டாக்டரின் புலம்பலைக் கண்டுகொள்ள வேண்டாம்: நஜிப்புக்கு நஸ்ரி அறிவுறுத்து

Nazricabinethududடாக்டர்  மகாதிர் முகம்மட்  என்ன  வேண்டுமானாலும்  புலம்பிக்கொள்ளட்டும். அதைக்  கண்டுகொள்ளாதிருப்பதுதான்  புத்திசாலித்தனம்  என்று  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு ஆலோசனை  கூறியுள்ளார்  நஸ்ரி  அப்துல்  அசீஸ்.

அதற்குப்  பதில்  கூறுவதை  விடுத்து  நஜிப்  பிரதமருக்குரிய  பொறுப்புகளில்  கவனம்  செலுத்த  வேண்டும்  எனப் பண்பாட்டு,  சுற்றுலா  அமைச்சர் அறிவுறுத்தினார்.

அவரின்  தந்தை, இரண்டாவது  பிரதமர்  அப்துல்  ரசாக்  உசேனின்  அருகில்கூட  வர  முடியாது  என்று  மகாதிர்  அண்மையில்  நஜிப்பை சாடியிருப்பது பற்றிக்  குறிப்பிட்ட  நஸ்ரி,  இது  எப்போதும்  எல்லோராலும்  சொல்லப்படுவதுதான்  என்றார்.

“ஆங்கிலத்தில்  ‘We are just a chip off the old block’என்று  சொல்வதுண்டு.   நாம்  நம்  தந்தையரை  மிஞ்ச முடியாது  என்பதுதான்  அதன்  பொருள்.

“இதில்  ஒன்றும்  புதுமை  இல்லை. இதை  நினைத்து ஆத்திரப்பட  வேண்டியதில்லை”, என்று  நஸ்ரி  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

மக்களாட்சி  நாடுகளில்  தலைவர்கள்  குறைகூறலிலிருந்து  தப்ப  முடியாது  என்றும்  நஸ்ரி குறிப்பிட்டார்.