பக்கத்தான் ரக்யாட் உடைந்து விடாமல் அதை பாஸ் பாதுகாப்பது முக்கியம். அதைச் செய்யத் தவறினால் பொதுத் தேர்தலில் தோல்வி உறுதி என்று அதன் இளைஞர் தலைவர் சுஹாய்ஸான் காயாட் எச்சரித்துள்ளார்.
“நம்மை நாமே நம்பி இருப்பதே சிறந்தது என்று நினைப்போரும் நம்மிடையே இருக்கிறார்கள்.
“முன்பு நாம் தனித்து நின்றபோது கிடைத்த முடிவு நமக்கு மறந்து போனதா?
“1986-இல் பாஸ் 98 இடங்களில் போட்டியிட்ட போதிலும் நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு இடத்தைத்தான் வென்றது என்பதை மறந்து விட்டோமா?
“அந்நிலை திரும்பவும் நிகழ வேண்டுமா?”. இன்று ஷா ஆலமில் பாஸ் முக்தாமாரில் உரையாற்றியபோது சுஹாய்ஸான் இவ்வாறு வினவினார்.
நல்லா சொன்னிங்க , பாஸ் பகதானில் இறுப்பது தான் அனிவருக்கும் நல்லது. பரிசாநை நம்பி மொசம்பொகாதிர்கள்
கவலை படாதே சகோதரா அம்னோ உங்களுக்கு கை கொடுக்கும் நம்பிக்கை சப்பாத்தி.
உன் தலைவனே மாற்றுங்க அய்யா, எல்லாம் சரியாகிவிடும்.
உண்மையை உணர்ந்து பேசியதற்கு நன்றி..வாழ்த்துக்கள்..!
உன்தலைவர் ஒரு ஈர மரக்கட்டை !
கூட்டாளிகளை ஏதோ காட்டு எலிகளைப் பார்த்துப் பயப்படுவது போல் பயந்தால் பின்னே என்ன மாலை மரியாதையா வரும்!
அரசியலையும் சமயத்தையும் ஒரே குண்டுச் சட்டியில் போட்டு உருட்டினால் இப்படித்தான் நாசமாகிவிடும். சமயத்தை உலாமா உறுப்பினர்களிடமும் அரசியலை லிபரல் உறுப்பினர்களிடமும் பிரித்து அமைத்தால், பாஸ் மக்களிடம் தாக்கு பிடிக்க வாய்ப்புண்டு. இல்லையேல், நீங்கள் சொன்னதுபோல் வரும் பொதுத் தேர்தலில் பேரடி தோல்வி நிச்சயமாக நடக்கும். முத்தாமார் முடிந்தவுடன் பக்காத்தானுடன் மறுபடியும் மாமன் மச்சான் உறவை வளர்க்க முயற்ச்சிக்க வேண்டாம். இம்மாதிரியான கேவல அரசியல் இக்காலத்தில் எடுபடாது!!!
தனிச்சை யாக நின்று ஒரு போதும் பாஸ் வெற்றி பெற முடியாது 100%இது உண்மை.