விளையாட்டாளர்களைக் குறை சொல்லாதீர்: குறைசொல்வோர்மீது கைரி பாய்ச்சல்

farahஜிம்னாஸ்டிக் வீராங்கனை  ஃபாரா  என்  அப்துல்   ஹாடி-யைத்  தற்காக்க  முன்வந்த  இளைஞர், விளையாட்டுத்  துறை  அமைச்சர் கைரி  ஜமாலுடின், பார்க்க  வேண்டியது  விளையாட்டாளர்களின்  சாதனையைத்தானே  தவிர  உடையை  அல்ல  என்று  குறைகூறுவோரைச்  சாடினார்.

“ஜிம்னாஸ்டிக்  போட்டியில்  ஃபாரா  நீதிபதிகளையே  வியக்க  வைத்து  நாட்டுக்குத்  தங்கப்  பதக்கம்  பெற்றுத்  தந்துள்ளார்.

“அவரது  செயல்கள்  சரியா, தப்பா  என்பதை  இறைவன்தான்  முடிவு  செய்ய  வேண்டும். நீங்கள்  அல்ல. விளையாட்டாளர்களைத்  தொந்திரவு செய்யாதீர்கள்”, என  கைரி  நேற்றிரவு  டிவிட்  செய்திருந்தார்.

ஃபாரா  ஜிம்னாஸ்டிக்  போட்டிக்குரிய  உடை  அணிந்திருந்ததை  இணையத்தில்  குறைகூறியவர்களுக்கு  கைரி  இவ்வாறு  எதிர்வினை  ஆற்றியிருந்தார்.