உள்நாட்டு வாணிக, பயனீட்டாளர் விவகார அமைச்சர் ஹசன் மலேக், ஷா ஆலம் குடியிருப்புப் பகுதியில் அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனை இனவாத நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுவதை மறுக்கிறார்.
அமைச்சு வேண்டுமென்றே மலாய்க்காரர்கள் நிறைய வசிக்கும் அப்பகுதியைத் தேர்ந்தெடுத்து போலிப் பொருள்களையும் ஜிஎஸ்டி-மீறல்களையும் கண்டுபிடிப்பதற்கான அந்த அதிரடிச் சோதனையை நடத்தியுள்ளது என இணையத்தளத்தில் குறைகூறப்பட்டிருப்பதற்கு ஹசன் இவ்வாறு பதிலளித்தார்.
இப்படிப்பட்ட நடவடிக்கைகள் இனவேறுபாடின்றி எல்லா இடங்களிலும் நடப்பதாக அவர் சொன்னார்.
“பெட்டாலிங் ஸ்ட்ரீட்டில் (சீனர்களைக் கொண்ட பகுதி) நான்கு தடவை அதிரடிச் சோதனைகளை நடத்தியுள்ளோம். ஊடகங்களில் அச்செய்தி வரவில்லை”, என்றவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஷா ஆலம் சோதனைக்குமுன் இந்தியர்கள் அதிகம் வாழும் பிரிக்பீல்ட்ஸ் பகுதியிலும் அமைச்சு அதிரடிச் சோதனைகளை நடத்தியது என அமைச்சர் கூறினார்.
நமக்கு தெரிந்தவரை அரசாங்க அதிகாரிகள், மலாய்க்காரர் அல்லாதவர்களைதான் அதிகம் நெருக்குகிறார்கள். இதென்ன புது கதை? நமுரமாதிரி சொல்லுங்கள் ஐயா
பெரும்பாலான அமலாக்க அதிகாரிகள் அலுவலகத்தில் வுட்கார்ந்த்து பேப்பர்
படிப்பதிலும் கதைபெசுவதிளும்தான் நேரத்தை கழிக்கிறார்கள் . சின்ன வூர்களில் காய்கறி விலை ,பலசரக்கு கடைகளில் பொருட்களின் விலை எப்படி உயர்த்தப்பட்டிருக்கிறது என்பதை இவர்கள் கண்டுகொள்வதே இல்லை .கெடாவில்
எக்ஸ்பிரஸ் பஸ் கட்டணம்
ஓவ்வொரு நாளும் ஒரு கட்டணமாக உள்ளது . இதையெல்லாம் யார் சரிசெய்வது?