தேசிய இலக்கியவாதி ஏ.சமட் இஸ்மாயில் இப்போது டிஏபி உறுப்பினர் என்பதை லிம் கிட் சியாங் இன்று அறிவித்தார்.
கிளந்தான், குவா மூசாங்கில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் 80-வயது கவிஞரிடம் அவரின் உறுப்பினர் அட்டையை வழங்கிய லிம், அவரை “Perwira Ubah” (மாற்றத்தைக் கொண்டுவரும் மாவீரர்) என்றும் வருணித்தார்.
டி எ பி, பாஸ், பி கே ஆர் மற்றும் பிற கூட்டணிக்கட்சிகள் ஒன்றிணைந்து பக்காத்தான் என்ற பெயரில் ஒரு கட்சியாக செயல்பட்டால், ஒருகால், மக்களிடையே உங்கள் நோக்கம் எடுபடும். அதுவரையில், என்னதான் முயற்சி எடுத்தாலும், இன ரீதியிலேயே அரசியல் முத்திரை குத்தப்படும். இதுதான் நமது மலேசியா அரசியல்!!!!
சிறந்த மலாய் அரசியல் தலைவர்களை இணைத்துக்கொள்வது இன்னும் சிறப்பாகும். மக்களிடையே நல்ல எதிர்பார்ப்பை கொண்டுவர வழிவகுக்கும். தொடரட்டும் உங்கள் நல்ல முயற்சி.!!!!
இவர் மாவிரர்ரா????????????? என்னடா நடக்குது நம்ம மலேசியால
DAP -ல் சேர்ந்த மலாய் பிரபலங்கள் பலர் சில வருடங்களிலேயே காணாமல் போய் விட்டனர் – இவரின் நிலை என்னவோ காலம் தான் சொல்லும்.
தேசிய இலக்கியவாதி சரி, ஆனல் கூடிய விரைவில் டிக்கெட் வாங்க இருக்கும் இந்த( இளம் )பஞ்சிக்கு மாவீரர் பட்டம்,இது வந்து d a p கட்சியை தூக்கி நிறுத்த போகுதாக்கும்.போங்கடா போக்கத்தவன்களா ?
நல்லதொரு முயற்ச்சி . இது வெற்றியடைய வாழ்த்துகள்.
என்னாப்பா! 102 வயது பெண்மணி டாக்டர் பட்டம் வாங்கியாத இப்போது தான் படித்தோம். அதன் ஈரம் கூட இன்னும் காயவில்லை. இவர் இன்னும் 20 ஆண்டுகள் இருக்க மாட்டாரா!
தெலுக் இந்தானில் மனோகரனின் கழுத்தில் கத்தியை வைத்து ‘கிளியோபாத்த்ரா’ டயானாவுக்கு [மலாய்ப்பெண்] சீட் கொடுத்தது டி.எ.பி. அடுத்து, பத்து கவானில் கஸ்தூரிக்கு ‘ஆப்பு’ வைத்து இந்த ‘வெள்ளைத் தாடி’ திருவள்ளுவருக்கு சீட் கொடுக்கும் இனவாத டி.எ.பி. டி.எ.பி.யில் அப்பனும் மவனும் போடும் கூத்து சகிக்கல.
இந்த வெண் தாடி வேந்தரின் சீர்மிகு செயல் மற்ற மலாய் இலக்கிய வாதிகளுக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கட்டும்.