1எம்டிபி இரகசியக் காப்புச் சட்டத்தின் பின்னால் பதுங்கிக் கொள்வதாக மகாதிர் அங்கலாய்ப்பு

loanமுன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட், முதலீட்டு  நிறுவனமான  1எம்டிபி  தம்  குறைகூறல்களிலிருந்து  தப்பிக்க  “அரசாங்க இரகசியச் சட்ட”த்தின்  பின்னே  ஒளிந்து  கொள்கிறது  எனச்  சாடியுள்ளார்.

“என்னுடைய  எல்லாக்  குறைகூறல்களையும்  தவறு  என்கிறது  1எம்டிபி. ஆனால், அதற்குச்  சான்றுகள் எதையும் காண்பிக்கவில்லை. கேட்டால் அது அரசாங்க இரகசியம்  என்று  கூறப்படுகிறது”, என்றாரவர்.

1எம்டிபி-க்கு  முன்பிருந்த  திரெங்கானு  முதலீட்டு  நிறுவனம் (டிஐஏ), அதன்  கடன்களுக்கு அதன்  எண்ணெய்க்  கிணறுகளை  ஈடு  வைக்க  மறுத்ததால் கூட்டரசு  அரசாங்கம்  அந்த ரிம5பில்லியன்  கடனுக்கு  உத்தரவாதம்  வழங்கியது.

“இந்த ரிம5 பில்லியன்  கடன்மீது  அமைச்சரவையில்  அறிக்கை  எதுவும் தாக்கல்  செய்யப்படவில்லை. அப்படி  இருந்தால் அறிக்கையைக்  காண்பியுங்கள், பார்க்கலாம்.  கேட்டால்  அமைச்சரவை  அறிக்கைகள் இரகசியமானவை  என்பீர்கள்”, என  மகாதிர் அவரது  வலைப்பக்கத்தில்  பதிவிட்டிருந்தார்.