உள்துறை அமைச்சு: அன்வாருக்கு வரும் கடிதங்களைத் தடுப்பதில்லை

prisonசிறையில்  உள்ள  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிமுக்கு  வரும்  கடிதங்கள் தடுக்கப்படுவதாகக்  கூறப்படுவதை  உள்துறை  அமைச்சு  மறுத்துள்ளது.

அன்வார்,  பிப்ரவரி 10-இல்  அவர்  சிறையிடப்பட்டதிலிருந்து  இதுவரை  சுங்கை  பூலோ  சிறைச்சாலைக்கு  எதிராக  எந்தப்  புகாரும்  செய்ததில்லை  எனவும்  அமைச்சு  இன்று  நாடாளுமன்றத்தில்  தெரிவித்தது.

“சிறைக்கு  வெளியில்  உள்ள  சில  தரப்புகள்தாம்  சுங்கை  பூலோ  சிறை  நிர்வாகம்மீது  பலவாறாகக்  குற்றஞ்சாட்டியுள்ளன”, என்று  அது  கூறிற்று.

அஹ்மட்  மர்சுக் ஷாரி (பாஸ்- பாச்சோக்)-இன்  கேள்விக்கு   உள்துறை  அமைச்சு  இவ்வாறு  பதில்  அளித்திருந்தது.