பேராக்கில் ஆட்சிக்கவிழ்ப்பு எதிர்ப்பாளர்களுக்கு அரச மன்னிப்பு

pardonபேராக்  சுல்தான்  நஸ்ரின்  ஷா,  அம்மாநிலத்தில் 2009-இல்  ஆட்சிக்கவிழ்ப்பை  எதிர்த்து  ஆர்ப்பாட்டம்   நடத்தியதற்காக  சிறையிடப்பட்ட  11 சமூக  ஆர்வலர்களுக்கு அரச  மன்னிப்பு  வழங்கினார்.

சிறையிடப்பட்டவர்களில்  ஒருவரான  பத்  லத்திப்  மன்சூரின்  துணைவி,  நஷிடா முகம்மட்  நூர்  இதைத்  தெரிவித்தார்.

“தாப்பா  சிறையில்  உள்ளவர்களுக்கு  பேராக்  சுல்தானும்  பேராக்  மன்னிப்பு  வாரியமும்  அரச  மன்னிப்பை  வழங்கியிருக்கிறார்கள்  என்பதைத்  தெரிவித்துக்  கொள்கிறேன்.

“ரமலான்  மற்றும் அய்டில்பித்ரியை  முன்னிட்டு  இது  வழங்கப்பட்டிருக்கிறது”, என்றவர்  முகநூலில்  பதிவிட்டிருக்கிறார்.

சமூக ஆர்வலர்களின்  விடுதலைக்கு  அவர்களின் துணைவியர்  கோரிக்கை  விடுத்திருந்ததாகவும்  அவர்  சொன்னார்.