பிகேஆர்-பாஸ் ஒத்துழைப்புப் பற்றிக் கருத்துரைக்க டிஏபி மறுப்பு

limடிஏபி  தலைமைச்  செயலாளர்  லிம்  குவான்  எங், சிலாங்கூரிலும்  கிளந்தானிலும்  பாஸ்- உடன்  ஒத்துழைக்கும்  பிகேஆரின்  முடிவை  டிஏபி  ஏற்கிறதா அல்லது  நிராகரிக்கிறதா   என்பது  குறித்து  கருத்துரைக்க  மறுத்தார்.

பக்கத்தான்  ரக்யாட்  செத்துவிட்டது  என  டிஏபி  தெளிவாகவே  கூறியிருக்கிறது  என்று  குறிப்பிட்ட  லிம்,  ஆனால்  அது  பிகேஆருடனும்  ஒத்த  கருத்தையுடைய  மற்ற  கட்சிகளுடனும்  தொடர்ந்து  ஒத்துழைக்கும்  என்றார்.

பாஸுடன்  ஒத்துழைக்கும்  பிகேரின்  முடிவை  டிஏபி  ஏற்கிறதா, அது  தெரிந்தும்  சிலாங்கூர்  அரசுடன்  அது தொடர்ந்து  ஒத்துழைக்குமா  என்று  பினாங்கு  முதலமைச்சரான  லிம்மிடம்  வினவப்பட்டதற்கு, “ஒவ்வொருவருக்கும்  தனி  நிலைப்பாடு  இருக்கிறது. எனவே, அம்முடிவை  நாங்கள்  ஏற்றுக்கொள்கிறோமா  இல்லையா  என்பது  பற்றிக்  கருத்துரைக்க  இயலாது”, என்றார்.