பாஸ் ஆன்மிகத் தலைவர் ஹாரோன் டின், அதிருப்தி கொண்ட முற்போக்காளர்கள் கட்சியிலிருந்து பிரிந்து செல்வது “பகைவர்களுக்குத்தான்” நன்மையாக அமையும் என்று எச்சரித்தார். ஆனால், பகைவர்கள் யார் என்பதை அவர் குறிப்பிடவில்லை.
ஜி18 என்று அழைக்கப்படும் தரப்பினர் பாஸிலிருந்து விலகிச் சென்றால் முடிவில் அழிந்தொழிவார்கள் என்றவர் எச்சரித்ததாக த ஸ்டார் கூறியது.
“ஆடுகள் கூட்டமாக இருக்கும்வரைதான் அவற்றுக்குப் பாதுகாப்பு. ஆனால், கூட்டத்தைவிட்டு விலகிச் செல்லும் ஆடுகள் ஓநாய்களால் அடித்துக்கொல்லப்படும்”, என்றவர் கூறினாராம்.
“தனித்தனி வழிகளில் செல்லுவதால் அவர்கள் கட்சியில் பிளவை உண்டுபண்ணுவதுடன் இஸ்லாமிய இயக்கத்தையும் பல்வீனப்படுத்தி விடுகிறார்கள்.
“அவர்களின் செயல் எதிரிகளுக்குத்தான் நன்மையாக முடியும்”, என்று ஹாரோன் டின் கூறியதாக த ஸ்டார் தெரிவித்தது.
ஓர் ஆட்டுக் கூட்டம் சிங்கத்தின் பக்கம்தான் செல்வேன் என்று அடம் பிடித்தாள் என்ன செய்வது. விலகுவதே சிறப்பு… நன்மையையும் கூட..
மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்தால் இதுதான் நிலைமை. உங்கள் உலாமா கூட்டத்தோடு அம்னோவில் சேர்ந்துவிடுங்கள். எலும்பாவது கிடைக்கும். இல்லையேல், உலாமா தலைவர்கள் காணாமல் போய்விடுவீர்கள். புதிய கூட்டணி மலரட்டும்!! சிந்திப்போம் செயல் படுவோம்!!
ஆடு நனையுதுன்னு ஓநாய் அழுகின்றது!
சரியான உவமை முன்னே உள்ள ஆடு அம்நோவென்ர குழியில் விழுந்து விட்டது அதன் பின்னே வரும் ஆடும் விழும் அறிவுள்ள ஆடு தப்பித்துக்கொள்ளும் !
இது பெருநாள் காலம். ஆடுகளை நினைவு படுத்துகிறீர்கள். கூட்டமாக ஆடுகள் இருந்தால் கூட்டமாக அள்ளிக்கொண்டு போய் அப்படியே கண்டந்துண்டமாக வெட்டி விற்று விடுகிறார்கள்! வளர்ப்பவனுக்கு பே! பே!
நீங்கள் எல்லோரும் பிரிந்து தனிமரமாவதர்க்குள் ஹாரி ராயா விடுமுறையில் அம்னோ வுடன் கலந்து பேசி உங்களை காப்பாற்றி கொள்ளுங்கள் .