விளையாட்டு வீராங்கனையின் உடையைக் குறைகூறியவர்களுக்கு சுல்தான் கண்டனம்

farahதேசிய  ஜிம்னாஸ்டிக்  போட்டியாளர்  ஃபாரா  என் ஹாடி  சீ விளையாட்டுப்  போட்டியில்  தங்கப் பதக்கங்கள்  வென்று  மலேசியாவுக்குப்  பெருமை  சேர்த்தவர்களில்  ஒருவராவார். ஆனால், சிலருக்கு அவர்  பெற்ற  வெற்றி  பெரிதாகத்  தெரியவில்லை.  அவர்  அணிந்திருந்த  உடைகள்தான்  அவர்களின்  கவனத்தை  ஈர்த்திருக்கிறது. அரைகுறையாக  உடை  அணிந்திருந்தார்  என  அவர்கள்  குறை  கூறினார்கள்.

அப்படிப்பட்டவர்களை  சிலாங்கூர்  சுல்தான்  சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ்  ஷா கடிந்து  கொண்டார்.

சமூக  வலைத்தளங்களில் உடை  பற்றிக்  குறைகூறியவர்கள்  அவ்வாறு  சொல்லியிருக்கக்  கூடாது  என்றாரவர்.

“சிலாங்கூர்  உள்பட, நாட்டுக்குப்  பெருமை  தேடித்தந்த  உங்கள்  சாதனையை  அவர்கள்  கொண்டாடி  இருக்க  வேண்டும்”, என  சுல்தான்  ஃபாராவுக்குக்  கொடுத்த  பாராட்டுக்  கடிதத்தில்  குறிப்பிட்டிருந்தார். பாராட்டுக்  கடிதத்தை  அரண்மனை  அதிகாரி  ஒருவர் ஃபாராவிடம்  வழங்கினார்.

குறுகிய  மனம்  கொண்டவர்களின்  கருத்துகளைப்  பொருட்படுத்தாமல்  தன்னுடைய  துறையில்  சிறந்து விளங்க  அவர்  தொடர்ந்து பாடுபட  வேண்டும்  என்றும்  சுல்தான்  அறிவுரை  கூறினார்.

சுல்தானின்  பெருந்தன்மை  தன்  இதயத்தை  விட்டதாக  ஃபாரா  த  ஸ்டாரிடம்  தெரிவித்தார்.