பிரதமர் நஜிப் ரசாக் அமைச்சரவையில் மாற்றங்கள் விரைவில் செய்யப்படலாம் என்று இன்று கோடிகாட்டினார். பல அமைச்சர்கள் இதனை முன்பு மறுத்துள்ளனர்.
அமைச்சரவை மாற்றங்கள் குறித்த ஊகங்கள் பற்றி வினவிய போது, அவர் அதனை மறுக்கவில்லை. ஆனால், பொறுமை காக்குமாறு கேட்டுக்கொண்டார்..
இன்று கோலாலம்பூரில் நடந்த அம்னோ உச்சமன்ற கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், காத்திருக்குமாறு கூறினார்.
இயற்கை வளம் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சர் ஜி. பழனிவேல் அமைச்சரவையில் நீடிக்க மாட்டார் என்று அவர் குறிப்பிட்டார்.
“பழனிவேலுவின் அமைச்சர் பதவி குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்.
“இப்போதைக்கு மஇகா அதன் தலைமைத்துவம் குறித்து முடிவு எடுக்க வேண்டும்”, என்றாரவர்.
மஇகா சச்சரவுக்கு நீதிமன்றம் தீர்வு காண்பதை தாம் விரும்புவதாகவும் நஜிப் கூறினார்.
திருடர்களுக்கு முதலிடம் கொடுங்கள். அப்பத்தான் உங்களுக்கு ஆதரவாக காலில் விழுந்துக் கிடப்பார்கள். திருடன், திருடனைச் சார்ந்துதான் இருப்பான். மூஹிடனை தண்ணி இல்லாத காட்டுக்கு அனுப்பிடுங்க. சஹிட்டை இயற்கை வளம் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சர் பதவியில் போட்டுடுங்க. ஹிசமுடினை உள்துறை அமைச்சராக போட்டுடுங்க. சரவனமானவருக்கு மிளகாய் நடும் அமைச்சில் மந்திரி பதவி கொடுத்திடுங்க. மக்கள் மூக்கில் விரலை வைத்துக் கொள்ளும் அளவிற்கு ஒரு நல்ல ஒரு பெரிய மாற்றமாக செய்யுங்க. அப்பதான் இன்னும் நிறைய பணம் பார்க்கலாம்!.
அமைச்சரவை மாற்றம் வரும் போது கண்டிப்பாக சாமிவேலுக்கும் அமைச்சர் பதவி கொடுத்திடுங்க..? ஏன்னா பழனிக்கு பதவி பறிபோகுது என்பது தெளிவாக தெரிகிறது. ம.இ.கா.வின் இன்றைய நிலைக்கு சாமிவேலு தான் காரணம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விசியம். சமுதாயத்தை கூறுப்போட்ட சாமிவேலுவை செனட்டர் ஆக்கி மந்திரி பதவி கொடுத்தா இன்னும் சமுதாயம் சீரழிஞ்சி போக சிறப்பாக இருக்கும் ஆகவே பிரதமர் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் அதுவும் உங்க விருப்பமும் நிறைவேறும்…?
தயாவு
செய்து
நீங்கள்
பெரிய
தவறு
செய்துவிட
வேண்டாம்
நஜிப்
அவர்களே
. உண்மை
வர
போராடிய
ஒரு
உண்மை
தலைவர்
திரு
பழனிவேல்
அவர்கள்
. முதலில் நீங்கள்
திருடன்
சாமீ
அவர்களை
விரடுங்கள்
. எங்கள்
உரிமைகளை சொததுகலை
திருப்பி
கொடுக்கும்
வரை
அவனை
பதவியில்
விட்டு
நீக்குங்கள்
. உங்கள்
மேல்
நாங்கள்
நல்ல
மதிப்பு
வைது உள்ளோம்
. திருடன்
திருடன்
நஜிப் அவர்களே! அமைச்சரவை மாற்றத்தில் முதலில் பிரதமரை மாற்றுங்கள்! அப்போது தான் எல்லாம் சரியாகும்!
குடிமகன் என்ற முறையில், சட்டதில் இடம் உண்டு என்ற முறையில் எனது ஆதங்கத்தை கூறுகிறேன். அமைச்சரவை மாற்றத்தில் நேர்மையான,உண்மையான,படிக்கத் தெரிந்த,சட்டம் தெரிந்த,இலஞ்சம் பெறாத,அணைத்து மதத்தினரையும் சமமாக பார்க்கக் கூடிய,ஆங்கிலம்,தேசிய மொழி நன்கு பேசத் தெரிந்த,மக்களின் உண்மையான நிலைமையை புரிந்து உள்ள,பணிவன்புக் கொண்ட , மனசாட்சி உள்ளவர்களை அமைச்சர்களாக தேர்வு செய்து நாட்டை வலுப்பெற ஆவணக்கொள்ளவும் . அதேபோல அறிவுமிகுந்த சட்டம் தெரிந்த, இனம் பார்க்காத , நடுநிலை வகுக்கக்கூடிய போலிஸ் தலைவரையும் ,சட்டத்துறை தலைவரையும் தேர்வு செய்யவும் . நன்றி .
ஐயா பிரதமரே முக்கிய கோரிக்கை.
தேர்தல் ஆணையரையும்.IGP யையும்
ஈராக்கிற்கு மாற்றி அணிப்பிடுங்க
உங்களுக்கு கோடான கோடி
புண்ணியங்க .GST யை கலச்சிடுங்க.
மைடினை தூக்கி மீன்வள அமைச்சரா
க்கிடுங்க அப்பரம்மா காக்காமலபார்
மகாதிரை நோக்கி தேசநிந்தனை
சட்டத்தை பாச்சுங்க அப்பறமா நிங்க
விலகிடுங்க.
அமைச்சரவை மாற்றம் ஏற்பாட்டால் நாடு உருப்பட்டு விடுமா? தற்போது இந்த அரசாங்கத்தின் ஊழல்கள் நிறைய வெளி வந்துக் கொண்டிருப்பதால், இத்தகைய ஊழல்களை மூடி மறைக்கும் திறமை படைத்தோரையே அடுத்து வரும் அமைச்சரவைக்கு தேர்ந்தெடுப்பார் அல்தாந்துயா நஜிப்.
ஐயா, சிவலிங்கம் அவர்களே, நக்கும் நரிகள் கூட்டத்தில் நந்தியைத் தேடச் சொன்னால் எப்படி ஐயா கிடைக்கும்??? அதற்கு புத்தன், இயேசு, காந்தி போன்றோர் மறுபிறவிதான் எடுக்க வேண்டும்!!
இப்படி நல்ல தலைவர்களை எல்லாம் தேடித் பிடித்து பதவியில் அமர்த்திய உடனே கூடவே வந்து உட்கார்ந்து விடுவார்கள் சகுனிகள் வேலை செய்ய ஒரு கூட்டம். அப்படி சகுனி வலையில் வீழ்ந்து இடம் தெரியாமல் போனவர்களில் கிர் தோயோவும் ஒருவர். உண்மையாக இந்நாட்டில் நல்ல ஆட்சி நீண்ட காலத்திற்கு நிலை பெற வேண்டுமானால் நல்லவர்கள் எல்லாம் அரசியலுக்கு வாருங்கள் நல்லவர்கள் எத்துனை பேர் முன் வருவார் என்று சொல்லுங்கள். அப்புறம் பார்க்கலாம் நல்லவர்களை ஆட்சியில் அமர்த்துவதை. தங்களின் நல்லெண்ணத்திற்கு அந்த சிவலிங்கமே தங்களுக்குத் துணையாக இருக்க வேண்டுகின்றேன்.
சிவா தவறானவரிடம், உங்கள் ஆதங்கம் . பிரதமரையே மாற்ற வேண்டும் . தினமும் குழப்படியான நிர்வாகத்தால் நாடு சூழ்ந்துள்ள நிலையில் மனசாட்சி ,உண்மை , நேர்மை ,சட்டம்,எல்லாம் தூள் . பழனிவேல் ஒன்றை நினைவு கொள்ள வேண்டும் . நேர்மைக்கு என்றுமே பங்கம் இல்லை . கட்சியியை அம்நோவிடமோ , ரோசிடமோ அடமானம் வைத்து விடாதீர்கள் . கட்சியின் தனித்துவம், கொள்கைகள் மாறக்கூடாது . அமைச்சர் பதவி பறிக்கப்பட்டாலும் கவலை வேண்டாம் .கட்சியை சரியான வழியில் கொண்டு செல்லுங்கள் . நல்ல எண்ணம் கொண்டவர்கள் உங்களுக்கு தோல் கொடுக்க காத்திருக்கிறோம் . அமைச்சர் பதவி கொண்டு தன்மானங்க்களை விலைக்கு வாங்கி விட அனுமதிக்காதீர்கள் . உங்கள் உழைப்புக்கு பதவிகள் ,வரப்போகும் மாற்றங்களினால் கிடைக்கும் .
ம.இ . கவில் இனிமேல் புரட்சிகள் வேண்டும் . இது ஆமாம் சாமி போடும் கட்சியல்ல . கூறு போடும் கட்சியல்ல . கையேந்தும் கட்சியல்ல . கட்சிக்கு மரியாதை கொண்டுவரவேண்டும் . பொய் வாக்குறுதிகள் வேண்டாம் . சொல்லி விட்டு செய்வதைவிட , செய்துவிட்டு சொல்லுங்கள் . இந்த நாட்டில் நாம் கௌரமாக வாழ வழிகளை தேடுங்கள் . முன்னாள் நிர்வாகம் நம் வம்சாவழியை ஏளனத்தின் எல்லைக்கே கொண்டு சென்று விட்டார்கள் . எங்கு சென்றாலும் நமக்கு கதவடைப்பு , கெஞ்சி கூத்தாடும் நிலை . தகுதிகள் இருந்தும் வாய்மை இல்லையேல் ,, வாழ்வில்லை .
அமைச்சரவையில் என்ன மாற்றம் ஏற்பட்டாலும் தமிழினத்தின் தலைவிதியை யாரும் மாற்றப்போவதில்லை.ம.இ.காவில் பல தலைவர்கள் வந்து போய்விட்டார்கள்.தற்பொழுது 1% இருந்து இறங்குமுகமாக இருக்கும் நம் சமுதாயத்தின் பொருளாதாரத்தை 3% ஆக்கி விடுவோம் என்று மேடையில் முழக்கமிட்டதோடு முடிந்து விட்டது.அதை செய்து முடிக்க எந்த ம.இ.கா. தலைவருக்கும் தற்போது தில் இல்லை.முடிந்தால் செய்து காட்டி விட்டு முழக்கமிடுங்கள்.சும்மா வெறும் கெக்கரிப்பாக இருக்க்க கூடாது.
என்ன செய்வது நஜிப்புக்கு , உண்மையானவர் யார், சகுனி யார் என்று தெரியவில்லை ,காரணம் அவர் மகாபாரதம் படிக்கவில்லை , குறுக்கு புத்தியில் ,கோள் மூட்டுபவர்கள் ,சிறந்தவர்களாக அவர் கருதுகிறார் . நஜிப் பாணியில் , அவர் எண்ணங்களை புரிந்து கொண்ட சில மேதாவிகள், தனிப்பட்டஇயக்கங்கள் முறையில் பொருளாதார அனுகூலங்கள் பெற்று உயர்வடைந்துள்ளனர் . மக்களுக்கு யாது பயன் . சிந்தனை சிற்பி நஜிப்புக்கு வேண்டியதெல்லாம் தேர்தல் வாக்குகளின் மோகம் .
பி என் அமைச்சரவையிலும் சரி ம இ க வாக இருந்தாலும் சரி கூனி , சகுனி வெல்லாம் இருக்கும் வரை எந்த பெரிய மாற்றமும் ஏற்பட போவதில்லை !!
…………………….எப்படா இந்த சூன்யம் தொலைவான் ?
முக்ரிஸ் அம்னோ தலைவராகும் வரை மகாதிர் கத்திக் கொண்டிருப்பார். அன்வாரரின் மன்னிப்பு மனுவை மன்னிப்பு வாரியம் நிராகரித்த அன்றே மகாதீர் 1 எம்.டி.பி பிரச்னையை எழுப்பினார்..மாமன்னர் மனு குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என அறிவிப்பு விடுங்கள் மகாதிர் கப்சிப் ஆகிவிடுவார்.