ஜுரைடா: காலிட் தம்மை விற்பதென முடிவு செய்துவிட்டாரா?

khalidசிலாங்கூரின் முன்னாள்  மந்திரி  புசார் காலிட்  இப்ராகிம்,  மீண்டும்  மந்திரி  புசார் ஆவதற்குத்  தயார்  என்று  அறிவித்திருப்பதை  அவரின்  முன்னாள்  பிகேஆர்  சகா  ஒருவர்  எள்ளி  நகையாடியுள்ளார்.

“அவர்  பிகேஆரிலிருந்து  நீக்கப்பட்டு  சுயேச்சை  சட்டமன்ற  உறுப்பினராகவும்  எம்பி-ஆகவும் உள்ளார். எந்தவொரு  அரசியல்  கட்சியிலும்  இல்லாத  ஒருவர் எப்படி  மந்திரி  புசார்  ஆக  முடியும்?

“அதிக  விலை  கொடுப்பாரிடம்  தம்மை  விற்றுவிட  முடிவு  செய்து விட்டாரா? ஒருவேளை  அம்னோவிடம்?”, என  அம்பாங்  எம்பி  ஜுரைடா கமருடின் ஓர்  அறிக்கையில்  வினவினார்.

பக்கத்தான்  பங்காளிக் கட்சியான  டிஏபியுடன்  உறவுகளை  முறித்துக்கொள்ளும்  பாஸ்  முக்தாமார்  தீர்மானத்தைத்  தொடர்ந்து  சிலாங்கூர்  அரசில்  நிலவி  வருவதைச் சரிசெய்ய  தம்மால்  முடியும்  என்றும்  அதன்  பொருட்டு  மந்திரி  புசார்  பதவியை  ஏற்க  தாம்  தயார்  என்றும்  காலிட்  மலாய்  மெயில்  ஆன்லைனில் கூறியிருப்பதன் தொடர்பில்  ஜுரைடா  இவ்வாறு  கருத்துரைத்தார்.