அம்னோ தேர்தல் தள்ளிப் போடப்பட்டதற்கு அரசியல் நெருக்கடியே காரணம், 1எம்டிபி அல்ல

adnanஅம்னோ தலைமைச்  செயலாளர்  தெங்கு  அட்னான்  தெங்கு  மன்சூர்,  கட்சித் தேர்தல்கள் தள்ளி  வைக்கப்பட்டுள்ளதற்கு   “அரசியல்  நெருக்கடி”தான்  காரணம்  என்று  வலியுறுத்தினார். 1எம்டிபி-க்கும்  அதற்கும்  தொடர்பில்லையாம்.

இன்று  தெங்கு  அட்னானைச் சந்தித்த  செய்தியாளர்கள், 1எம்டிபி  பிரச்னைக்குத்  தீர்வுகாண  கூடுதல்  கால  அவகாசம்  தேவைப்படுவதால்தான்  கட்சித்  தேர்தல்கள்  தள்ளிவைக்கப்பட்டனவா  என்று  வினவினர்.

“இல்லை, இல்லை,  இதற்கும் எந்தப்  பிரச்னைக்கும்  தொடர்பில்லை.

“நடப்பு  அரசியல்  நெருக்கடியால்தான்  கட்சித்  தேர்தல்கள்  தள்ளி  வைக்கப்பட்டன”, என்றாரவர்.

அரசியல்  நெருக்கடி  என்னவென்பதை  தெங்கு  அட்னான்  விவரிக்கவில்லை. ஆனால், முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டின்  இடைவிடாத  தாக்குதல்கள்தான்  கட்சிக்குள்  அரசியல்  நெருக்கடி  உருவாகியிருப்பதாக  தெரிகிறது.

கட்சி உறுப்பினர்கள்  நஜிப்  ஆதரவாளர்கள்  மகாதிரின்  ஆதரவாளர்கள்  எனப்  பிரிந்து  கிடப்பதாகக்  கூறப்படுகிறது. இதனால்  நஜிப்பின்  தலைமையே  ஆட்டம்  கண்டிருக்கிறதாம்.