தேசிய குடிமையியல் பிரிவு(பிடிஎன்) இனவாதம் பேசுவதை நியாப்படுத்தி வந்தாலும் அதைக் கலைக்க வேண்டிய அவசியமில்லை என்கிறார் மசீச தலைமைச் செயலாளர் ஒங் கா சுவான்.
ஆனால், அதன் பாடத் திட்டத்தைத்தான் மாற்றி அமைக்க வேண்டும் என்றாரவர். அதன் நடப்புப் பாடத்திட்டம் பயிற்சியாளர்களுக்குப் பயனளிப்பதாக இல்லை. அது அவர்களைக் குறுகிய- எண்ணம் கொண்டவர்களாக மாற்றி விடுகிறது.
“நிர்வாகக் கோளாறோ, அணுகுமுறையில் தவறோ, ஏதோ ஒன்று சரியாக இல்லை.
“அதனால் அதை மாற்ற வேண்டும். குறுகிய- மனம்கொண்டு மற்றவர்களைக் கண்டனம் செய்யும் போக்கைப் பெருந்தன்மை கொண்ட போக்காக மாற்ற , என்று ஒங் கூறினார்.
அட மட்டி, அடி மடையா, மக்களை இன ரீதியில் பிரித்து இன வேற்றுமைகளை திணித்து மக்களை பிரித்து ஒடுக்குவதே பி என் அரசாங்கத்தின் நோக்கம். இந்த திட்டத்தை வளர்க்க பிடிஎன் பாலமாகப் பயன்படுத்தப்படுகிறது மக்களை, குறிப்பாக மலாய்க்காரர்களிடம் இன ரீதியில் வெறுப்பத் தூண்டி பிரித்து வாழ வழி வகுக்கும் கொள்கைக்காக மக்கள் வரிப்பணம் அழிக்கப்படுகிறது ??
…………..பேசறான் பாரு ……………….
அடுத்த தேர்தலில் உனக்கும் உனது கட்சிக்கும் உனது சமூகம் பாடம் புகட்டும்.பொறுத்திரு மகனே.