அன்வார் இப்ராகிமைச் சிறையிலிருந்து அகற்றி வீட்டுக்காவலில் வைக்க வேண்டும் என அவரின் வழக்குரைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு செய்தால் அவருக்கு வழக்கமான மருத்துவ சிகிச்சை கிடைப்பதற்கு வசதியாக இருக்கும் என்றவர்கள் சொன்னார்கள்.
அன்வாருக்கு முறையான மருத்துவ கவனிப்பு கிடைக்காததால் அவரது உடல்நிலை விரைவாக மோசமடைந்து வருகிறது என வழக்குரைஞர்கள் சிவராசையாவும் ஜெரெட் ஜென்சரும் பத்திரிகை அறிக்கையொன்றில் கூறினர்.
பிப்ரவரி 10-இல், சிறையில் அடைக்கப்பட்டதிலிருந்து அன்வார் 6கிகிராம் எடை குறைந்திருப்பதாகவும் இரத்த அழுத்தமும் நிலையாக இல்லை என்றும், சிறுநீரக பாதிப்பு, தோள்பட்டையில் தசை கிழிந்திருப்பது, நாள்பட்ட மூட்டு அழற்சி போன்றவற்றால் அவர் துன்பப்படுவதாகவும் அவர்கள் கூறினர்.
அவருக்கு மருத்துவ சிகிச்சையுடன் கோதுமைபுரதம்- அற்ற உணவும் தீவிர உடலியல் சிகிச்சையும் தேவைப்படுவதாகவும் இவை சுங்கை பூலா சிறையில் கிடைக்காது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இதுவும் ஒரு நல்ல முயற்சி.பல உலக தலைவர்கள் இதுபோல் வீட்டுக்காவலில் வைக்கப் பட்டத்தை உதாரணமாக கொள்ளலாம்.ஆனால் ஆட்சியாளர்களிடம் மனிதாபமானம் இருக்க வேண்டுமே.இதற்கு சட்டத்தை காட்டியல்லவா அதனை அவர்கள் நிராகரிப்பார்கள்.
நாட்டு நிலைமையும் , அன்வாரின் உடல் நிலையும் ஒரே மாதிரியா அல்லவா இருக்கு ?