சங்கப் பதிவகம் (ஆர்ஓஎஸ்), இன்று மலேசிய பைபிள் கழக(பிஎஸ்எம்)த்துக்கு மேற்கொள்ளவிருந்த வருகையை ஒத்தித்துள்ளது. வருகை ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணத்தை அது தெரிவிக்கவில்லை.
ஆர்ஓஎஸ் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்ட செய்தி இன்று காலை தொலைபேசிவழி தெரிவிக்கப்பட்டதாக பிஎஸ்எம் செயலாளர் ரெவரெண்ட் மெத்தியு கே. புன்னூஸ் கூறினார்.
ஆர்ஓஎஸ் இன்று பிஎஸ்எம்-மைச் சோதனையிட வருவதாக நேற்று மின்னஞ்சல் செய்தி ஒன்றை அனுப்பி இருந்தது. அதனை அடுத்து ஆர்ஓஎஸ் அந்தக் கிறிஸ்துவக் கழகத்தை மிரட்டும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக பொதுமக்களில் பலரும் சாடியிருந்தனர்.
இதெல்லாம் “வழக்கமான நடவடிக்கைதான்” என்றும் “சந்தேகப்படுவதற்கு ஏதுமில்லை” என்றும் ஆர்ஓஎஸ் தெரிவித்ததாக மலாய் மெயில் ஆன்லைன் நேற்று அறிவித்திருந்தது.
ஆர் ஒ எஸ் மிகவும் கெட்டிக்காரர்கள்.
தனக்கு சம்பந்தமில்லாத பிரச்சனையில் தலையிடுகிறது ஆர்.ஒ.எஸ்.ம.இ.கா வைப் போல் மலேசிய பைபிள் கழகத்தையும் சாமானியமாக எடை போட்டுவிட்டது இந்த ஆர்.ஓ. எஸ்..யாரோ செல்வாக்குமிக்கவர்கள் ஆர்.ஓ. எஸ்ஸை பகடை காயாக்குகிரார்கள்.தூண்டி விடுகிறார்கள்.இது பல மதத்தவர்கள் சுபீட்சமாக வாழும் மலேசியாவுக்கு உகந்ததல்ல.