பாஸ் கட்சியிலிருந்து பிரிந்து செல்ல நினைப்போர் புதிய கட்சி அமைத்தால் அக்கட்சி முஸ்லிம்களையும் முஸ்லிம்- அல்லாதாரையும் உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும் என முன்னாள் பாஸ் கட்சித் தலைவரின் மகன் கூறுகிறார்.
1989-இலிருந்து 2002வரை பாஸ் கட்சித் தலைவராக இருந்த காலஞ்சென்ற பாட்சில் நூரின் புதல்வரான ஃபாஇஸ் பாட்சில், பாஸ் கட்சித் தேர்தலில் தோற்றுப்போன முற்போக்காளர்களை அங்கீகரிக்கும் அறிகுறி எதுவும் கட்சியில் தென்படவில்லை என்றார்.
“புதிதாக அமைக்கப்படும் கட்சி இஸ்லாத்துக்காகத்தான் போராட வேண்டும், இஸ்லாமிய கொள்கைகளைத்தான் கொண்டிருக்க வேண்டும். அதேவேளை அது முற்போக்கானதாகவும் எல்லா சமயத்தாரையும் அரவணைத்துச் செல்லும் கட்சியாகவும் விளங்க வேண்டும்.
“உறுப்பினர்கள் என்னும்போது, முஸ்லிம்களும் இஸ்லாமிய போராட்டத்தை ஆதரிக்கும் முஸ்லிம் -அல்லாதாரும் அதில் உறுப்பினராவதற்கு அனுமதிக்க வேண்டும். இப்போதைய பாஸ் கட்சி ஆதரவாளர் பிரிவு என்ற ஒன்றைக் கொண்டிருக்கிறது. அதில் இருப்பவர்கள் பாஸ் உறுப்பினர் ஆக மாட்டார்கள்.
“புதிய கட்சி முஸ்லிம்- அல்லாதாரையும் உறுப்பினர்களாக்கி அவர்கள் வாக்களிக்கவும் அனுமதிக்க வேண்டும்”. மலேசியாகினி நேர்காணலில் ஃபாய்ஸ் இவ்வாறு கூறினார்.
நல்ல சிந்தனை .
………………இன்றைக்கு இந் நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? எந்த மதம் கொலை மிரட்டல் செய்து மதம் மாற்றி கொண்டிருக்கிறது? எவ்வளவு கிறிஸ்தவர்களையும் குர்டியவரகளையும் கொன்று பலாத் காரமாய் பாலியல் கொடுமைகளை செய்தது? நினைக்கவே கூசுகிறது– இவ்வளவும் மதத்தின் பேரில் – ஐநாவும் தூங்கிகொண்டிருக்கிறது மற்ற நாடுகளும் பேச்சில் மட்டுமே ஈடுபட்டு கையால் ஆகாத தனத்தில் உள்ளன