சிலாங்கூர் அரசு, அம்மாநிலத்தின் மூன்று நகரங்களில்- ஷா ஆலம், கிள்ளான், சுபாங் ஜெயா ஆகியவற்றில்- இலவச பேருந்து சேவையைத் தொடக்கியுள்ளது.
“இலவச பேருந்து சேவை வழங்கும் முதல் மாநிலம் சிலாங்கூர்தான்”,என சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் தெங் சாங் கிம், ஷா ஆலமில் அச்சேவையைத் தொடக்கிவைத்தபோது கூறினார்.
காலை 6மணிக்குத் தொடங்கி இரவு மணி 10வரை அச்சேவை நடைபெறும். 15நிமிட இடைவேளையில் ஒரு பேருந்து வரும் போகும்.
இலவச பேருந்து சேவையை விரிவுபடுத்தும் திட்டங்களும் உண்டு. அடுத்தபடியாக காஜாங்கிலும் அம்பாங் ஜெயாவிலும் அச்சேவை தொடங்கும்.
“அது அடுத்த ஆண்டுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், முடிந்தால் இவ்வாண்டிலேயே தொடங்குவோம்”, என தெங் குறிப்பிட்டார்.
இலவச பஸ் சேவை வரவேற்க வேண்டிய ஒன்றுதான் ! அனால் டெக்சி டிரைவர்களின் வருமானம் !!! ???
சேவை இடங்களின் வரைப்படத்தை வெளியிட்டால் மக்களுக்கு வசதியாக இருக்கும்.
இலவச பேருந்தில் அந்நிய நாட்டவர்தானே அதிகமாக பயணிக்கின்றனர் ! சில நேரம் வாடை தாங்கமுடிவில்லையடா சாமியோ !
நல்ல திட்டம். ஆனால் அந்நிய நாட்டவர்கள் இச்சேவையை இலவசமாக பயன்படுத்துவது நியாம் இல்லேயே. சிலாங்கூர் அரசு இதனை கவனித்தால் நல்லது.நில வரி , நகராட்சி வரி என வரியை செலுத்துவது மலேசியயர்களே. ஆகையால் மலேசியயர்களுக்கே முன்னுரிமை வழங்குவது நல்லது.
அடுத்து, நகரங்களில் வேலை செய்யும் பாட்டாளிகள் இலவசமாகப் சாப்பிட அல்லது குறைந்த விலையில் சாப்பிட தேர்தல் வருங்கால் ‘மாங்காய் கூட்டணி உணவகம்’ (அம்மா உணவகம் போல்) ஒன்று வைத்திட நல்ல ஒட்டு வேட்டை நடக்கும். உங்கள் ஆதரவாளர்களும் ‘Catering Business’ செய்து பிழைத்துக் கொள்ளலாம் அல்லவா?. கூட்டி கழிச்சுப் பாருங்க எல்லாம் சரியா வரும்.
நல்ல திட்டம்தான் அதை அதிகமாக பயன் படுத்துவது அந்நிய நாட்டவர்களாகதான் இருப்பார்கள்…?
மலேசியர்களுக்கு சிறப்பு பதிவு செய்த ‘பாஸ்களை’ வழங்கினால் எந்த ஒரு சிக்கலும் ஏற்படாது!
இதில் அதிகம் பாதிக்கபடுபவர்கள் மலாய்காரர்கள்தான்,அவர்கள்தான் நிறைய டாக்சியொட்டிகள்,பாகாதனுக்கு பாராடுக்கள்.
பயணம் செய்பவர்கள் பெரும்பாலும் வெளி நாட்டுக்காரர்கள் . பச கம்பெனிக்கு கொடுக்கும் பணத்தை கஷ்டப்படும் மாணவர்களுக்கு கொடுங்க