பெட்ரோசவூதி இண்டர்நேசனல் நிறுவன(பிஎஸ்ஐ) நிர்வாகி சேவியர் ஜுஸ்டோ கைது செய்யப்பட்ட சம்பவம் 1எம்டிபி-இலிருந்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்குப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டிருக்கிறது என்கிறார் மூத்த செய்தியாளர் ஒருவர்.
அம்னோவுக்கு அது நல்ல செய்தி, ஆனால் 1எம்டிபி கடன்களாலும் மற்ற காரணங்களாலும் பாதிக்கப்பட்ட மலேசியப் பொருளாதாரத்தில் அது தாக்கத்தை ஏற்படுத்தாது என ஏ.காடிர் ஜாசின் கூறினார்.
“பிஎஸ்ஐ தலைவரை தாய் போலீசார் கைது செய்ததை அறிந்து அம்னோ மேல்மட்டத் தலைவர்கள் புளகாங்கிதம் அடைந்திருக்கலாம். ஆனால், நம் பொருளாதாரத்தின்மீது நம்பிக்கையை வரவழைக்க அது உதவாது.
“அதை 1எம்டிபி மீதுள்ள கவனத்தைத் திசைதிருப்பும் தந்திரம் என்றுகூட சிலர் சொல்கிறார்கள்”, என காடிர் தம் வலைப்பதிவில் கூறியுள்ளார்.
தில்லுமுல்லு இல்லையெனில், அரசாங்க சார்புடைய இந்த நிறுவனம் தமது கணக்கறிக்கையை மார்ச் தொடங்கி மூன்று மாதத்திலேயே அறிவித்திருக்க வேண்டும். இந்நாள் வரையில் இதன் கணக்கறிக்கையை தொடங்காததின் மர்மம் யாது ??? இந்த நிறுவனத்துக்கு மட்டும் ஏன் இந்த மறைமுக சலுகை???
இந்த ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் எல்லாம் அரசியல்வாதிகளும் அவர்களின் கூலி படைகளும் என்பது தெரிந்த செய்தி தானே. அப்படி இருக்க எப்படி ஐயா துரித நடவடிக்கை எதிர்ப்பார்க்க முடியும்?
எங்க வேண்டும் என்றாலும் திசை திருப்பட்டும் ,கொள்ளையில் கத்திரிக்காய் முற்றினால் சந்தைக்கு வந்தே ஆகவேண்டும் !
எந்த ஊழல் வாதியாவது இந் நாள் வரை தண்டிக்கப்பட்டு இருக்கின்றனா? எல்லாம் கண்துடைப்பே. காவல் துறையில் இருந்து அரசு வரை எல்லாமே பேருக்குத்தான்– உண்மையில் ஊழலில் தான் பயன் அடைகின்றனர். சிங்கபூரைப்போலிருந்தால் எவ்வளவோ குறைந்திருக்கும். மேலிருந்து அடிமட்டம் வரை ஊழல்.