மலேசியாவின் எதிர்கால வாய்ப்பு எதிர்மறை நிலையிலிருந்து திடநிலைக்கு வந்திருப்பதாகக் கூறும் ஃபிட்ச் நிறுவனத்தின் மதிப்பீடு அரசாங்கத்தின் நிதியியல் நிர்வாகத் திறத்தைக் காண்பிக்கிறது எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறினார்.
“புறத்தே பல நிச்சயமற்ற நிலவரங்கள் நிலவினாலும் அண்மையில் அறிவிக்கப்பட்ட அம்மதிப்பீடு நம் அரசாங்கத்தின் நிதியியல் நிர்வாகத்தையும் பொருளாதாரக் கொள்கைகளையும் பிரதிபலிக்கின்றது”, என முகநூலில் நஜிப் குறிப்பிட்டிருந்தார்..
2013-இல், மலேசியாவின் எதிர்கால வாய்ப்பு “எதிர்மறையானது” என்று கூறிய ஃபிட்ச், நேற்று அறிவிக்கப்பட்ட தரமதிப்பீட்டில் அக்கருத்தை மாற்றிக் கொண்டிருக்கிறது.
அதன் தொடர்பில் இன்று வெளியிட்டிருந்த அறிக்கையில், மலேசியாவின் நிதியியல் நிலை மேம்பட்டிருப்பதாகவும் பொருள், சேவை வரியும் (ஜிஎஸ்டி) எரிபொருள் உதவித் தொகை சீரமைப்பும் அதன் நிதியியல் கொள்கைகளுக்கு ஆதரவாக இருந்தன என்றும் ஃபிட்ச் கூறியது.
1MDB தில்லுமுல்லு இல்லையெனில், நாட்டின் நிதி நிலைமை இன்னும் நன்றாகவே மேம்பட்டிருக்கும்!!! பெட்ரோல் விலை தாக்கத்தை மட்டும் காட்டி மக்களை திசை திருப்ப வேண்டாம். பிற பெட்ரோல் உற்பத்தி நாடுகளின் பொருளாதார நிலை மலேசியாவை விட உறுதியாகவே உள்ளது!!! கொள்ளை அடிப்பதை நிறுத்தினால், நாடு நல்ல மேம்பாடு அடையும். உங்கள் ஆட்சியில் இது பகல் கனவே!!! சிற்றெரும்பு
இவர்களின் ஆட்சியை நிலை நிறுத்தான் வருகிறார்களே சில million பங்களா தேசிகள்….
பெட்ரோல் விலை ஏற்றி மக்களை சுமையில் ஆழ்த்தியது உன்னுடைய வெற்றியே.அதுதான் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி. பொய் நம்பிக்கை என்பது ஆட்சியின் தத்துவம்.
அவர்களுக்கு பின் வெகுமதி எவ்வளவோ?
20 வெள்ளி மலேசிய நோட்டை, அண்டை நாடான தாய்லாந்தில் அனைத்து நாணய மாற்று வியாபாரிகளும் வாங்க மறுப்பது ஏன் ? என்பதற்கு பதில் கூறுவார்களா ?