குலா: இந்தியர்களுக்கான சமூக பொருளாதார மேம்பாட்டு மையம் சுதந்திரமச் செயல் பட மஇகா வழிவிடவேண்டும்

 

kulaசெடிக் எனப்படும் இந்தியர்களுக்கான சமூக பொருளாதார மேம்பாட்டு திட்ட மையம் பெற்ற 100 மில்லியன் ரிங்கிட், ம.இ.காவின்  வழியாகத்தான் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று அண்மையில் அதன் (துணை)தலைவர் டாக்டர் சுப்ரமணியம்  கூறியிருந்ததை ஒரு விவேகமான கருத்து என்று  தம்மால் கருதமுடியவில்லை என்று டிஎபி மு. குலசேகரன் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார்.
சுதந்திரத்திற்குப் பிறகு அரசாங்கம்  இந்தியர்களுக்கான   ஒதுக்கீடுகளை ம.இ.கா வழிதான் இது நாள் வரை  கொடுத்து வந்திருக்கின்றது என்பதைச் சுட்டிக் காட்டிய அவர், அதற்கான முழு பலன்களை  இந்திய சமூகம் பெற்றதற்கான  ஆதாரம் இல்லை.அதனால் அதிருப்தி அடைந்த அரசாங்கம்  பிரதமர்  துறை வாயிலாக  இந்தியர்களுக்கான சமூக பொருளாதார மேம்பாட்டு திட்ட மையத்தை  உருவாக்கி  ரி.ம 100 மில்லியனை  ஒதுக்கீடு செய்து அத்தொகை இந்திய சமூகத்திற்கு  நேரடியாக சென்று சேரும் வகையில் உத்தரவிட்டுள்ளது என்றார்.

“இதனை  ஏன் அமைச்சர் சுப்ரமணியம் தவறாக  கருதுகிறரர் என்பது  புரியவில்லை!
ம.இ.கா இந்திய சமூகத்திற்கு முறையாக  சேவையாற்றவில்லை என்பது பலமுறை நிரூபனமாகிவிட்ட வேளையில் , இந்த நிதி ஒதுக்கீடு  ஒரு புதிய  துறையின் கீழ் நிருவகிக்கப்பட வேண்டும் என்று இந்த  அரசாங்கம் எடுத்த முடிவு சரி என்றே நான் கருதுகிறேன்.

“மேலும், இது போன்ற மாற்று  வழிகள்  அரசாங்கத்திற்கு  ஒன்றும் புதிதல்ல. மலாய்க்காரர்களுக்கென்று  மாரா என்கின்ற ஓர்  இமயமே பல வருடங்களாக செயல்படுகின்றது. மாராவுக்கு  ஒதுக்கப்படும் நிதியை அம்னோ தனக்கு  வேண்டும் என்று கேட்டதில்லை. மாறாக  அதற்கு மேலும் நிதி ஒதுக்கப்படவேண்டும் என்றே இதுநாள் வரை போராடி வந்திருக்கின்றது. அதில் வெற்றியும் கண்டுள்ளது”, என்று குலா விவரித்தார்.

இதே போன்று பிஎன்பி , இகுவனாஸ் நிறுவனங்களும் பூமிபுத்ராக்கள்  முன்னேற வேண்டும் என்கின்ற   முதன்மை நோக்குடன் செயல்படுகின்றன. இந்நிறுவனங்களை நிர்வகிக்க  அரசியல்  கட்சித்தலைவர்கள்  யாரும் இல்லை.  மாறாக  அரசாங்க ஊழியர்கள்தான்   இவற்றை அரசு தொடர்புடைய நிருவனங்கள் வழி நிர்வகித்து வருகிறார்கள்.

“செடிக் போன்ற மையங்களுக்கு அதிகமாக  நிதி ஒதுக்கப்பட வேண்டுமென்று  ம.இ.கா போராட வேண்டும். அதன் வழி  செடிக்கும் அரசு தொடர்புடைய  ஒரு நிறுவனமாக வளர்ச்சி பெற்று  அதில்  இந்தியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பெற்று  இந்தியர்களின்  பொருளாதார  சமூக வளர்ச்சி மேன்மை அடைய பாடுபட இயலும்”, என்று அவர் மேலும் கூறினார்.
முதன் முறையாக  செடிக் நிருவாகிகள்  நாடு முழுவதுவும் சென்று  இந்த ரிம100 மில்லியன்  தொகை யாருக்கு  எப்படி வழங்கப்படவிருக்கின்றது  என்று கூட்டங்கள் மூலம் தெளிவுபடுத்தி வருகிறார்கள் என்று அறிகின்றோம். இது நாள்வரை ம.இ.காவின் முன்னாள் தலைவர்கள் இது போன்ற  வெளிப்படையான போக்கை  கடைபிடித்ததாக தாம் அறியவில்லை என்றாரவர்.

“நிலைமை இப்படி இருக்கும் போழுது, இந்தியர்களுக்காக ஒதுக்கப்படும் இந்த ஒரு சிறிய தொகை தன்னிடம்தான் ஒப்படைக்கப்பட்டிருக்க N.S.Rajendranவேண்டுமென்று சொல்லுவது  அடாவடித்தனமானது.

இந்தத் தொகை  ஒருவேளை  எதிர்கட்சிகளிடம்ட் கொடுக்கப்படு   இந்தியர்களுக்கு செலவிட அரசாங்கம் வழி செய்திருக்குமேயானால் , ம.இ.காஅதன் எதிர்ப்பை  தெரிவிப்பது ஒரு வேளை  நியாயமாகப்படலாம். அராசங்கமே  இதனை ஓர் அரசாங்க ஊழியரைக் கொண்டு அதுவுரோர் இந்தியரை கொண்டு  நிருவகிக்கவிருப்பதை  ம.இ.கா ஆட்சேபிக்கக் கூடாது. மாறாக மனதார  பாரட்ட வேண்டும்”, என்று குலா கருத்துரைத்தார்.

 

மஇகாவின் சாதனைகள்!

 

டெலிகோம் பங்குகள்  சூரையாடப்பட்து, மைக்கா ஹோல்டிங்ஸ்-சின் தோல்வி , எம் ஐ இ டி சொத்துக் கடத்தல்  போன்றவையெல்லாம் ம.இ.காவின் “சாதனைகள்”. இவற்றை மக்கள் இன்னும் மறக்கவில்லை என்பதை  டாக்டர்  சுப்ரமணியம் நினைவில் கொள்ள வேண்டும்.

micpledgeம.இ.கா என்ற அரசியல் கட்சி  இந்தியர்களின் உரிமைகளுக்கும் வளர்ச்சிக்கும் போராட வேண்டும். கல்வி , பொருளாதார, சமூக வளர்ச்சிக்கு  இந்தியர்களுக்கு  ஒதுக்கப்பட வேண்டிய  நியாமான , சட்டபூர்வமான  உரிமைகளை அரசாங்கத்துடம் போராடி  பெற வேண்டியதுதான் அதன் தலையாய கடமை.
•    மெட்குலேஷன் இடங்கள் இன்னும் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை.
•    பல்கலைக்கழக  மாணவர் என்ணிக்கையில் நாம் இன்னும் திருப்தி அடையவில்லை.
•    அரசாங்கத் துறைகளில்  இந்தியர்களின் என்ணிக்கை சரிந்து வருகிறது.
•    இந்திய தொழில் முனைவர்களின் எண்ணிக்கை மற்ற  இனத்தவர்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாக உள்ளது.
•    குற்றச் செயல்களில் ஈடுபடும் நம்மவர்களின் என்ணிக்கை  மனம்  வேதனை  அளிக்கும் வகையில் உள்ளது.
இது போன்ற பல  பிச்சனைகளைத்  தீர்க்க ம.இ.கா ,அரசாங்கத்துடன்  போராடவேண்டுமே தவிர  பண ஒதுக்கீட்டிற்கு  போட்டிப் போடக்கூடாது என்று குலா வலியுறுத்தினார்.

மாறாக, மஇகா செடிக்குடன் இணைந்து  செயல்பட்டு இந்திய சமுதாயம் பயன் பெற பாடு பட வேண்டும் என்று ஆலோசனை கூறிய குலா, அரசியல் கட்சிகள்  மக்கள் பணத்தை  நிருவகிப்பது   என்றுமே நல்லதல்ல. இந்த நிதி ஒருவேளை பிரதமரால்  ம.இ.காவிற்கு  ஒதுக்கப்பட்டிருக்குமேயானால், அதன் பயன் பாடு கேள்வி குறியதாகியிருக்கும் என்றார்.

அந்நிதி மேல்மட்ட அரசியல்  தொடர்புள்ளவர்களுக்கே மட்டுமே பயன்பட்டிருக்குமே ஒழிய சாதாரண  ஏழை இந்திய மக்களுக்கு  அது போய்ச் சேர்ந்திருக்காது என்று அதிருட்டுக் கூறினார்.

ம.இ.கா இப்பணம் தன்வழியாகத்தான் இந்தியர்களுக்கு போய்ச் சேரவேண்டும் என்று வாதிட்டால், மற்ற ஒதுக்கீடுகளும் ம.இ.கா வழியாகத்தான் வழங்கப்படவேண்டும் என்ற தர்க்க ரீதியான கேள்வியும்  எழ வாய்ப்புள்ளது.

மெட்ரிகுலேசனில் 1500 இடங்களை  அரசாங்கம்  ஒதுக்கினால், அதனை ம.இ.காதான்  நிருவகிக்கும் என்று கோருவதில் என்ன நியாயம் இருக்க முடியும்?

போராட்டம் ம.இ.காவுடையாதாக இருக்க வேண்டுமேயொழிய அதனை  நடைமுறைப்படுத்துவது ம.இ.கா வின் வேலை இல்லை. அது அரசாங்கத்தின் கடமை. ம.இ.கா நிழல் அரசாங்கம் ஒன்றை   நடத்த முற்படக்கூடாது.

அதுவும் ம.இ.கா இப்பொழுது இருக்கும் இந்த பிளவு பட்ட நிலையில் அரசியல் சம்பந்தமில்லாத செடிக்கிடம் இப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருப்பது ஒரு விவேகமான முடிவு. அது  சுதந்திரமாக செயல்பட ம.இ.கா வழி விட வேண்டும் என்றார் டிஎபி நாடாளுமன்ற உறுப்பினரான எம். குலசேகரன்.