‘பிரபலமில்லாத ஒரு என்ஜிஓ-வுக்கு “Patriot” என்று எழுதப்பட்ட அழகான கார் எண்பட்டைகளை விற்பனை செய்ய அனுமதி வழங்கியவர் போக்குவரத்து அமைச்சர் லியோ தியோங் லாய் என்கிறார் துணை அமைச்சர் அப்துல் அசீஸ் கப்ராவி.
அனுமதி வழங்கப்பட்ட பின்னரே அது பற்றித் தாம் அறிய வந்ததாக அவர் கூறினார் என சின் சியு டெய்லி அற்வித்தது.
“திட்டவட்டமாக அது அமைச்சர் அனுமதி வழங்கிய திட்டம்தான்”, என அசீஸ் தெரிவித்தார்.
ஆனால், அது பற்றி அவர் மேல்விவரம் அளிக்க மறுத்தார்.
இவ்விவகாரம் பற்றி லியோ இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.


























இவரு அம்பு. எய்தவர் யாரோ?.