பாஸ்-அம்னோ கட்சிகளுக்கிடையில் நிலவும் பகையும் போட்டியும் நாடறிந்ததுதான். கட்சிப்பகையால் குடும்ப உறுப்பினர்களும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டார்கள். குடும்பத்தைவிட்டுப் பிரிந்தும் சென்றார்கள்.
காலஞ்சென்ற பாஸ் ஆன்மிகத் தலைவர் நிக் அப்துல் அசீஸ் நிக் மாட், அம்னோவுக்கு வாக்களிப்பவர்கள் நரகத்துக்குத்தான் செல்வார்கள் என்றுகூட சொன்னதுண்டு.
இதெல்லாம் பழைய கதை. இப்போது நிலமை மாறிவிட்டது. அடுத்த பொதுத் தேர்தலுக்குமுன் அம்னோவும் பாஸும் கைகோர்ப்பது உறுதி என்று முன்னாள் பிஎன் தலைவர் ஒருவர் கூறுகிறார்.
“விமர்சகர்களும் ஆய்வாளர்களும் என்ன வேண்டுமானாலும் கூறிக்கொள்ளட்டும் இது சாத்தியமான ஒரு அரசியல் கருத்துத்தான்- தேர்தலில் வெற்றிபெறுவதற்காக அவை ஒத்துழைக்கும்”, என அவர் மலேசியாகினியிடம் அடித்துக் கூறினார். ஆனால் அவர் தம் பெயரைத் தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
இதற்குமுன் யாராவது ஒருவர் டிஏபியும் பாஸும் கூட்டுச்சேரும் என்று கூறியிருந்தால் சொன்னவருக்கு மூளைக் கோளாறு என்றுதான் குற்றம் சாட்டியிருப்பார்கள் என அந்த முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டார்.
அம்னோவுக்கு மிகப் பெரிய எதிரியே பாஸ்தான் என்பதால் இரண்டும் ஒன்றுசேர்வதால் அவற்றின் வெற்றி வாய்ப்பு பெருகும் என்றாரவர்.
களவும் நிலவும் கூட்டணி வைத்தால், உன்னை நம்பி நான் கெட்டேன்! என்னை நம்பி நீ கெட்டாய்! என்று ஆகப் போகின்றது. அப்படி நடப்பதும் இந்நாட்டில் மிகப் பெரியதொரு அரசியல் மாற்றத்தைக் கொண்டு வரும். போர்னியோ! மலாயா!
பச்சோந்தி பெருச்சாளி கூட்டதில் இன்னொரு நம்பிக்கை துரோகி இணைப்பு நல்ல வேடிக்கை. நடத்துங்கள் உங்கள் நாடகத்தை. மக்கள் வேடிக்கை பார்க்கட்டும்.
அதான் வங்கிட்டிங்கிலே………………..அப்புறம் என்ன கூட்டனி………
இதில் எல்லாம் ஆச்சரியப்படு வதற்கு ஒன்றும் இல்லை.ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். புத்தி கெட்ட ஈன ஜென்மங்கள்.
இதுக்கு தானே ஆசைப்பட்டாய் பாசுகுமாரா?
அமீனோ உறுப்பினர்களை கபிர் என்று சொன்னவர் இன்று அந்தக் கட்சியுடன் கூட்டணி என்றால் அவர்கள் வணங்கும் ஆண்டவருக்கே பொறுக்குமா?. பொய் பித்தாலாட்டம் என்று இப்படியே போய் கொண்டிருந்தால் அந்த நிலாவை கையில் பிடித்து கசக்கி குப்பையில் போட்டு விட வேண்டியதுதான்.
அம்னோவும் பாசும் கூட்டு சேர்ந்ததால் ,, உலகில் அடுத்த கிரீஸ் ,,, மலேசியாதான் ,,,,திவால் ,
அட மாங்கா கூட்டனி சிங் சக் மக்கைகளுக்கு ஊஊஊஊஊஊஊஊஉ
….அடுத்து PKR …
தேங்காய் கூட்டனிக்குதான் இனி ஆப்பு! கொள்கைஇல்லா பங்காளி உறவுகள் குடைச்சல்கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள் !
பாஸ் பாரிசான் கூடனிக்கு பெரிய ஆப்பு அடுத்த பொதுத்தேர்தல்.
seliyan – இந்தியாவில் நடக்கும் அவ்வளவு தில்லு முள்ளு திகுடு தாளம் இங்கும் நடக்கும்-நடந்து கொண்டு இருக்கிறது–இல்லையாயின் 57 ஆண்டுகள் எப்படி இவன்கள் ஆட்சியில் உட்கார்ந்து அனுபவித்து கொண்டிருக்க முடியும்? அங்காவது ஆட்சி மாற்றம் நடந்தது இங்கு அதற்க்கு சந்தர்ப்பம் மிக குறைவே– கடந்த தேர்தலில் என்ன நடந்தது?
ஆங்கில பள்ளிகள் இருந்திருந்தால் ஆட்சி மாற்றம் எப்போதோ நடைபெற்றிருக்கும்– சிந்திக்க தெரிந்து இருக்கும்.
மனசாந்தியில்லாமல் சதா மாங்காய் கூட்டணியை ஊருக்காய் போட்டுக் கொண்டிருக்கும் போதே முன்னணியாக நின்ற கூட்டணி முக்காடு போட்டு மூடிக்கிட்டு போறது நொள்ளைக் கண்ணனுக்குத் தெரியலையா?