சுற்றுலா, பண்பாட்டு அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ், ஜோகூர் பட்டத்திளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் முன்வைத்த சமாதானக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்.
அமைச்சர், செவ்வாய்க்கிழமை 31-வயதை எட்டிய இளவசரருக்குப் பிறந்த நாள் வாழ்த்தையும் தெரிவித்துக்கொண்டார்.
“அவரைப் போலவே நானும் மனதில் பட்டதைச் சொன்னேன். வருத்தப்படும்படியாக எதுவும் சொல்லியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தனிப்பட்ட முறையில் அவரிடம் பகை எதுவும் இல்லை.
“இது ரமலான் மாதம். நல்ல மாதம். அண்மையில்தான் அவர் பிறந்த நாள் கொண்டாடினார். நோன்பு வாழ்த்துகள். அவர் குடும்பத்துடன் நலமே வாழ வாழ்த்துகிறேன். Maaf zahir dan batin”, என நஸ்ரி மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
நேற்று, துங்கு இஸ்மாயில் தம்மையும் நஸ்ரியையும் மோதவிட்டு வேடிக்கை பார்ப்பதைப் பத்திரிகைகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
பிரச்னையை மேலும் வளர விடக் கூடாது. அதனால் ஆகப் போவது எதுவுமில்லை என்று குறிப்பிட்ட இளவரசர், ரமலான் மாதத்துக்கு மரியாதை தெரிவிக்கும் வகையில் சச்சரவிடுவதை நிறுத்திக் கொள்ள விரும்புவதாகச் சொன்னார்.
அப்ப இதுவரை கடிச்சிக்கிட்டது சும்மா? பலே நடிகர்களடா!.
இதை நான் வரவேற்கிறேன் மனிதன் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும்.அங்கே பார்…நம் தளபதிகளை பார்த்து நாடே சிரிக்குது.30வருசம் கழித்து நமக்கு 2அமைசர்கல் கிடைக்க பெற்றதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தோம் ஆனால்?இதை பயன் படுத்த தெறியாத இந்த அமைச்சர்கள் பதவிக்கு ஆசை பட்டு அமைச்சர் பதவி பறிபோகும் நிலமிக்கு கொண்டு வந்து விட்டார்கள்,இவர்களை நம்பி இந்த நாட்டு இந்தியர்கள்…?
மக்கள் முட்டாள் ஆனார்கள் ,,ஏன்னா சரியா ?
மக்கள் முட்டாள் ஆனார்கள் ,,ஏன்னா சரியா ? எப்படி
என்னதான் இருந்தாலும் நாங்கள் என்றுமே ஒன்றுதான் என்று சொல்லிவிட்டார்கள்.பலிகடா ஆனது மக்கள்.