பாஸின் புதிய நம்பிக்கை(ஹராபான் பாரு)ஹரி ராயா-வின் மூன்றாவது நாளில் பாரு) டிஏபி, பிகேஆர் ஆகியவற்றுடன் சேர்ந்து புதிய எதிரணி ஒன்றை உருவாக்குவதற்கு ஆதரவு திரட்டும் நோக்கில் பெர்லிசில் மக்கள் பேரணி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யும்.
அக்கூட்டத்தில் பாஸ் தலைவர் முகம்மட் சாபுவும் ஜூன் மாதம் பாஸ் கட்சித் தேர்தலில் தோற்றுப்போன மற்ற முற்போக்குத் தலைவர்களும் கலந்துகொள்வார்கள் எனத் தெரிகிறது.
ஹரி ராயா-வுக்குப் பின்னர் பல தொடர்கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் அதில் முதலாவது ஜூலை 18-இல் நடைபெறலாம் என்றும் மாட் சாபு தெரிவித்தார்.
“நாங்கள் முன்பே வாக்குறுதி அளித்ததுபோல் புதிய பக்கத்தானை அல்லது கூட்டணியை அமைக்கப் போகிறோம். அதற்கு ஆதரவு தேடத்தான் பேரணி நடத்தப்படுகிறது.
“புதிய கூட்டணி என்பது கனவல்ல. அது உருவாகத்தான் போகிறது”, என்றாரவர்.
நல்ல தொடக்கம் .வாழ்த்துக்கள்.
முற்போக்கான சிந்தனை வாழ்த்துக்கள் !
எல்லா எதிர்கட்சிகளிலும், அதனை உடைக்கவும், குழப்பங்களை ஏற்படுத்தவும், ஆளும் கூட்டணி, தனது உளவு நாய்களை[spy] உள்ளே புகுத்தும். புதிய கட்சி கவனம்.
ஆமாண்டா.இது எவ்வளோ நாளைக்கோ …அடுத்த தேர்தலுக்கு தயாரா..இப்போ ஒண்ணா இருப்பானுங்கலாம் அப்புறம் அடிச்சிக்குவாணுங்க
…பாவம்..