பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், 1எம்டிபி பணத்தை எடுத்து சொந்தத்துக்கு என்றும் பயன்படுத்தியது இல்லை என்பதை வலியுறுத்தியுள்ளார்.
“மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். 1எம்டிபி பணத்தைச் சொந்த நலனுக்குப் பயன்படுத்தியதில்லை.
“வால் ஸ்திரிட் ஜர்னலின் கூற்று தீய நோக்கம் கொண்டது.அதற்கு நாட்டில் உள்ள சில தரப்பினர், பிரதமர் பதவியிலிருந்தும் அம்னோ தலைவர் பதவியிலிருந்தும் என்னை வலுக்கட்டாயமாக வெளியேற்ற நினைக்கும் சில தரப்பினர், ஆதரவாக உள்ளனர்”, என நஜிப் ஓர் அறிக்கையில் கூறியிருந்தார்.
சொந்த நலனுக்கு 1எம்டிபி பணத்தைப் பயன்படுத்தியதில்லை ஆனால் எதிகாலத்தில் என் பெரபிள்ளகளுக்காகதான் அந்த பணத்தை நான் பதிக்கி வைத்தேன் ,,எப்படி ???
தேர்தல் நிதிக்காக பயன் படுத்துவதும் சொந்த நலன் இல்லையே பிரதமர் அவர்களே… சொந்த நலனுக்காக பயன் படுத்தாமல் இருந்தாலும் தவறான காரியங்களுக்காக பயன்பட்டிருக்கலாம் அல்லவா…..
பொதுத் தேர்தலுக்குப் பயன் படுத்தினாலும் தான் பதவியில் நீடிக்க வேண்டும் என்னும் சுயநலம் தானே!
நான் அவன் இல்லை , நான் அவன் இல்லை , நான் அவன் இல்லை . 1MDB என்றால் என்னது ? யார் காரணம் ?
சித்திரகலா சொன்ன மாதிரி அல்லவா இருக்கு!. அப்ப பணம் தனது வங்கி கணக்குக்கு வந்தது தெரியும் போனதும் தெரியும். எடுத்த பணத்தை திருப்பிக் கொடுத்தால் தண்டனை இல்லை என்ற நோக்கத்தில் இப்படி ஒரு திசை திருப்பலா?. தில்லாலங்கடி பிரதமரா?.
முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை மாதிரி இருக்கே
இந்த குற்றசாட்டில் மாமா அன்வாருக்கும் பங்கு இருக்காமே…பொருத்து இருந்து பார்ப்போம்…
சொந்தநலனுக்கு 1எம்டிபி பணத்தை பயன்படுத்தியதில்லை என்றால் “BR1M” என்று மக்களுக்கு லஞ்சம் கொடுக்க பயன்படுத்தினேன் என்று மறைமுகமாக கூறுகிறாரோ ?
பணத்தை நான் எடுக்க வில்லை… அது தானாகவே என் அக்கௌன்ட் யில் இருந்தது …